நேற்றைய தினம் (20.01.2022) திருவள்ளூர் மாவட்ட வேளாண் உழவர் நலத்துறை சார்பில் திருத்தணியில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இதை பற்றிய எந்த ஓரு அறிவிப்பும் விவசாய உழவர் பெருமக்களுக்கு தெரிவிக்கப்படாத காரணத்தால் கூட்டத்தில் பங்கேற்க இரண்டே விவசாயிகள் மட்டும் வந்திருந்தனர். ஆனால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் என அதிகாரிகள் முப்பது பேர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் நலனில் அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்திருந்தால் அரசு எந்திரம் விவசாயிகள் பற்றிய கூட்டத் தகவலை விவசாயிகளுக்கு கொண்டு சேர்த்திருக்குமே! இந்த கூட்டமும் அதன் செலவும் வீண் தானே! யாருக்கு என்ன பயன்? என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.