இந்து விரோத திமுக அரசு பதவியேற்றத்திலிருந்து தொடர்ந்து இந்துக்களை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்தொழிக்கும் வேலையை இந்த விடியா அரசு செய்துவருகிறது. அதனை கண்டித்து இன்று (21.01.23) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவின் சார்பில் அடையாள உண்ணாவிரதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் நாச்சியப்பன் தலைமையில், மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு இந்து விரோத திமுகவின் செயல்களை கண்டித்தனர்.
இது குறித்து மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளதாவது:
“தமிழக மக்களின் ஆன்மீக உணர்வுகளைத் தொடர்ந்து புண்படுத்தும் அறமற்ற துறையான இந்து அறநிலையத் துறையைக் கண்டித்து, தமிழக பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் திரு. நாச்சியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
மத நம்பிக்கையும், இறை நம்பிக்கையும் இல்லாமல், மரபு சார்ந்த விஷயங்களில் தலையிட்டு, பக்தர்களை வஞ்சிக்கும் திறனற்ற திமுக அரசின் அத்துமீறல்களையும், கோவில் உண்டியல் பணத்தைக் கையாடல் செய்து கொழுக்கும் ஊழல் குறித்தும் உரையாற்றினேன்.
தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் திரு கரு நாகராஜன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு பெற்ற சகோதர சகோதரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.