கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து களப்பணியாற்றிய முன்கள வீரர்களை கௌரவித்தது, கேதார்நாத் ஆலயத்தை புதிப்பித்தபோது அங்கு பணியாற்றியவர்களுடன் இணைந்து உணவருந்தியது, ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றியை பறிகொடுத்தவர்களிடமும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என தந்தையுள்ளத்தோடு அன்பு காட்டியது என மோடியின் அன்பு நாட்டின் அனைத்து மக்களுமானது என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் வரும் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள கர்த்தவ்ய பாதை கட்டுமானத்தில் ஈடுபட்ட 850 தொழிலாளர்களுக்கு மோடி அரசு அழைப்பு விடுத்துள்ளது மட்டுமல்லாமல்.
அணிவகுப்பை பார்வையிட, ‘கர்த்தவ்ய பாதை’ கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 850 பேருக்கு, முதல் வரிசையில் இருக்கை வசதி செய்து தரும்படி, அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா அணிவகுப்பு, புதுடில்லி இந்தியா கேட்டிலிருந்து, ஜனாதிபதி மாளிகை வரையிலான ராஜபாதையில் நடப்பது வழக்கம். தற்போது, ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் கீழ், இந்த ராஜபாதை, கர்த்தவ்ய பாதை என பெயர் மாற்றப்பட்டு, மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
கர்த்தவ்ய பாதை என்றால், கடமை பாதை என அர்த்தம். 2 கி.மீ., நீளமுள்ள இந்த பாதையில் இந்தாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பு நடக்கவுள்ளது. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான வி.வி.ஐ.பி.,க்கள் மற்றும் பொதுமக்கள் வருவர்.
இந்தாண்டு அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிட, கர்த்தவ்ய பாதை கட்டுமான பணியில் ஈடுபட்ட, 850 தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி, அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி இந்த தொழிலாளர்களுக்கு முதல் வரிசையில் இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இவர்கள் மட்டுமல்லாமல், இந்தியா கேட் பகுதியில் பழம் உள்ளிட்ட தின் பண்டங்களை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளுக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிட முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிகிறது.
இதுவரை முதல்வரிசை என்றாலே வி. வி. ஐ. பிக்கள்தான். மோடி ஆட்சிக்கு வந்தபிறகுதான் பத்ம விருதுகள் சாமான்ய சாதனையாளர்களுக்கு வழங்கும் மாற்றம் ஏற்பட்டது. தற்போது அந்த செயல் குடியரசு தினவிழாவிலும் அமலாகிறது.