“எக்ஸாம் வாரியர்ஸ்” என்ற பிரதமர் மோடி எழுதிய புத்தகத்தை அவரே மேற்கோள் காட்டி தேர்வுக்கு தயார்படுத்துவதில் பெற்றோர்களின் ஆக்கப்பூர்வமான பங்கு குறித்த முக்கிய தொகுப்பை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தேர்வுக்கு தயார்படுத்துவதில் பெற்றோர்களின் ஆக்கப்பூர்வமான பங்கு குறித்த முக்கிய தொகுப்பாகும். எக்ஸாம் வாரியர்ஸ் (பரீட்சைக்குப் பயம் ஏன்)” என கூறியுள்ளார். மேலும் தனது தொடர் டுவீட்டுகளில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, புதுவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக், மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், அமைச்சர் அண்னபூர்னா தேவி உள்ளிட்ட பலர், ‘பரீட்சைக்குப் பயமேன்’ மற்றும் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகங்களை வெளியிட்ட டுவீட்டுகளையும் பகிர்ந்துள்ளார்.