2030 க்குள் நான்கு லட்சம் தேவாலயங்கள் கட்ட கிறிஸ்துவ மிஷனரிகள் திட்டமிட்டிருந்தால் அதற்கு இந்த ஹிந்து விரோத திமுக அரசின் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் நான்கு லட்சம் என இலக்கு நிர்ணயித்து இருக்கிறார்கள். அது சரி, அமைச்சர் உதயநிதியே சொல்லிவிட்டார் அவர் ஒரு கிறிஸ்துவர் என , ஆக அனுமதிகள் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும். இங்கு கோவில்களை இடிப்பது எப்படி எளிதோ, அதே போல் தேவாலயமும், பள்ளி வாசல்களும் கட்டுவது திராவிட மாடல் ஆட்சியில் அத்தனை எளிது.
சமீபத்தில் சென்னையில் பிரபலமான ஒரு நட்சத்திர விடுதியில் தமிழகத்தில் இருக்கும் கிறிஸ்தவ அமைப்புகளில் சார்பில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் விரைவில் தமிழக முழுவதும் புதிதாக நான்கு லட்சம் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டுவது பற்றி ஒரு ஆலயங்களையும் முன்னிறுத்தி 100 பேர் என்ற வீதத்தில் இந்துக்களை மதமாற்றம் செய்து தமிழகத்தில் கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக மாற்றுவது பற்றியும் அதற்காக பணம் பரிசுப் பொருள் வியாபாரம் உத்தியோகம் தொழில் வாய்ப்புகள் என்று பல்வேறு கவர்ச்சிகரமான விஷயங்களை முன்னிறுத்துவது பற்றியும் மதமாற்ற ஆலோசனை நடைபெற்றிருக்கிறது.
நாடு முழுவதும் நடைபெறும் கட்டாயம் மதமாற்றம் பற்றி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உப்பாத்தியாயா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் பதிலளித்த தமிழக அரசு தமிழகத்தில் அதுபோல மத மாற்றங்களும் மதமாற்ற முயற்சிகளும் நடைபெறவில்லை என்றும் தமிழக அரசு விழிப்புடன் கண்காணித்து வருவதாகவும் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. “இது போன்ற விஷயங்களில் அரசியல் செய்யாதீர்கள் உண்மை தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் தற்போது தமிழகத்தின் தலைநகரில் உச்ச அந்தஸ்து கொண்ட நட்சத்திர விடுதியில் மதமாற்றத்தை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் முன்னெடுக்கப்படுவது பற்றிய கலந்தாய்வு பகிரங்கமாக நடைபெற்று இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதைப்பற்றி இந்த நிமிடம் வரை தமிழக அரசு வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பதும் சபாநாயகர் அப்பாவும், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எல்லாரும் சொல்வது போல் இது கிறிஸ்தவர்களால் அமைந்த அரசு என்பதால் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு நேரடியாக துணை நிற்பது போன்ற அடையாளமாகவே இது கருதப்படுகிறது.
மதமாற்றம் என்ற பெயரில் சொந்த நாட்டின் மக்களை தேசத்திற்கு எதிராக மூளைச்சலவை செய்யும் தேசிய அபாயமான மதமாற்றத்தை எதிர்த்து இந்து அமைப்புகளும் கட்சிகளும் போராடி வரும் நிலையில் இது போன்றதொரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று இருப்பது இந்து ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.