பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி, தான் சார்ந்த கட்சியையே மாற்று கட்சிக்கு அடகுவைத்து தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு 11 எம்எல்ஏக்களை விற்று , 2 இடைத்தேர்தல்களில் தன் கட்சியையே டெபாசிட் இழக்க வைத்து, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை விலைக்கு விற்ற திரு மாணிக் தாகூர் “கட்சி காவல் தடை சட்டத்தை” பற்றி பேசுவது வினோதமாக இருக்கிறது.
கொஞ்சம் கூட எம்பிக்கள் எண்ணிக்கை இல்லாத சந்திரசேகர், தேவ கவுடா போன்றவர்களை பிரதமராக்கி அவர்களை குறுகிய காலத்தில் பதவி நீக்கிய கட்சி காங்கிரஸ் …
பலமே இல்லாத மாற்று க் கட்சிக்காரரை தன்னுடைய பேராசையால் பிரதமராக்கி அவர்களை அவமானப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தது காங்கிரஸ் கட்சி. நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக வர இருக்கும் மோடியை பார்த்து காங்கிரஸ் அரண்டு போய் இருப்பது நியாயமே
கண்ணுக்கட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா அம்மையார் ஒரு முறை இறுமாப்போடு சொன்னார். ஆனால் எளிமையான முறையிலே பார்த்தாலும் இன்று பாஜகவின் மோடிக்கு எதிராக எந்த கட்சியிலும் பிரதமர் மந்திரி வேட்பாளரே இல்லை என்பது கண் கூடு
மாற்றுக் கட்சிக்காரர்கள் ஊடக நண்பர்கள் நடுநிலையாளர்கள் கூட 2024 ல் மீண்டும் மோடியே பிரதமர், பாஜகவே வெல்லும் என சொல்லும் சூழ்நிலையில், மாணிக் தாகூரின் அறிக்கை பேச்சு நகைப்புக்கு உரியதாக இருக்கிறது
ராஜஸ்தான் மாநில சபாநாயகர் சி.பி ஜோஷி அறிக்கையில் மாணிக் தாகூருக்கு பதிலளித்துள்ளார். அதில் சட்டமன்றத்துக்குள் உறுப்பினர்கள் ஒழுங்காக மரியாதையாக கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும், சபாநாயகரின் உரிமையை குறைக்க வேண்டும், கட்சி தாவல் செய்யும் எம்.எல்.ஏக்கள் எம்பிக்களை கட்சியே சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் தர வேண்டும் என்று கூறுவதற்கு 50 ஆண்டுகள் நாட்டை ஆண்டு அழித்த காங்கிரசின் செயல்பாடுகள் தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்த கருத்தை மாணிக் தாக்கூர் படிக்க மறந்தது ஏனோ?