கடந்த 20.01.23 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்களின் ஆன்மீக உணர்வுகளை புண்படுத்தும் திமுகவின் ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழக பாஜகவின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தினை நிறைவுசெய்து மாநிலத் தலைவர் அண்ணாமலை ஹிந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகளை விமர்சித்தும், எச்சரித்தும் பேசினார். அவர் ஆற்றிய உரை இதோ…
தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் காலையிலிருந்து ஒரு முக்கியப் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஏதாவது பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று இந்தத் திமுக ஆட்சியில் உண்ணாவிரதம் இருந்தால் உட்கார்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான், ஏனென்றால் அது தீர்க்கப்படவே மாட்டாது.
ஹிந்து அறநிலையத்துதுறையில் மர்மமான விஷயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவை மக்களுக்குத் தெரியாது. இப்பிரச்னைகளை மக்களிடையே எடுத்துச் சென்று அவற்றைப் பேசும் பொருளாக ஆக்குவதே இந்த உண்ணாவிரதத்தின் நோக்கம். இது பாஜகவின் ஆன்மீக ஆலய மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் நாச்சியப்பன் அவர்கள் தலைமையில் நடக்கிறது. எந்தவொரு கட்சியிலும் இது போன்ற ஒரு பிரிவு இருந்ததாக சரித்திரம் இல்லை.
இந்தப் பிரிவு கடந்த ஒரு ஆண்டாக அதிகாரிகளுடன் போராடி ஆலயங்கள் தொடர்பான பல பிரச்னைகளைத் தீர்த்திருக்கிறது .
கோவில் நிர்வாகம் அரசின் கையில் உள்ளது. ஹெச் ஆர் ஆண்டு சி இ (HR & CE), சட்டம் கோயில்களை நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை மட்டுமே அரசுக்கு அளித்துள்ளது . கோயில் வருமானத்தில் 12% நிர்வாகச் செலவுக்கும் 4% தணிக்கைக்கும் செல்கிறது. மீதி 84% கோயில்களின் பூஜை , விழாக்கள் மற்றும் மேம்பாட்டுக்குச் செலவழிக்கப்பட வேண்டும்.
16% எடுத்துக் கொண்ட பிறகும் அவர்களின் நடத்தை எவ்வாறு உள்ளது? கபாலீஸ்வரர் கோயிலில் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் 270 பேர் பங்கு கொண்டனர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற தகவலின்படி அவர்களுக்கு தலா ‘ பட்டர் முறுக்கு 50 கிராம், டீ , காபி, மதிய உணவு, மாலையில் காராசேவ், குலாப் ஜாமுன் இவை வழங்கப்பட்டன . இதற்கான செலவு உண்டியல் பணத்திலிருந்து எடுக்கப்பட்டது.
மக்கள் கஷ்டப்பட்டு உண்டியலில் போடும் பணம் இவ்வாறு செலவழிக்கப்படுகிறது. சில பெண்மணிகள் தங்களது தாலியையே உண்டியலில் போடுகின்றனர்.இதே போல் வட பழனி ஆண்டவர் திருக்கோயிலில் நடந்த கூட்டத்துக்கு 50 பேருக்கு பக்கோடா, மினி மீல்ஸ் மிக்சர்,டீ, வாட்டர் பாட்டில் ஆகியவற்றுக்கான செலவு உண்டியல் பணத்திலிருந்து எடுக்கப்பட்டது
ஒரு அற நிலையத்துறை அலுவலகக் கழிப்பறையில் ‘டாய்லெட் சீட் (‘Toilet seat) மாற்றிய வகையில் உண்டியல் பணத்திலிருந்து 12,400 ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இது நடந்தது அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் பட்டுக்கோட்டை. தணிக்கைக் குழு தமிழகம் முழுதும் கோயில் செலவுகளைத் தணிக்கை செய்கிறது.
1951 இலிருந்து 1,56,0574 ரசீதுகள் முறையற்றவை என்று தணிக்கைக் குழு சுட்டிக் காட்டியுள்ளது. இதன் மொத்தத் தொகை 1302 கோடியே 89 லட்சம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ‘ஏற்கெனவே 2 போலிரோ கார் வைத்திருக்கிறோம்; எங்கள் அதிகாரிக்கு இப்பொது ஒரு இன்னோவா கார் தேவை. அதற்காக உண்டியல் பணத்திலிருந்து 30 லட்சத்து 46 ஆயிரத்து 221 ரூபாய் எடுத்துக் கொள்கிறோம் ‘என்று கூறியுள்ளனர்.அந்தக் கார் யார் வீட்டில் உள்ளது? , கட்சிக்காரர்கள் உபயோகிக்கிறார்களா? தெரியாது.
1,56,0574 ( ஒரு லட்சத்து ஐம்பத்து ஆறாயிரத்து ஐநூற்று எழுபத்தி ஏழு) பில்கள் ( Bills). 1302 கோடி ரூபாய். என்னுடைய கணக்குப்படி இந்தத் தொகை 6,000 கோடிக்கு மேல் இருக்க வேண்டும்.
அமைச்சர்கள் ,அதிகாரிகள் ஆலயங்களின் வருமானத்தை அனுபவிப்பதற்காக, கான்டராக்டர்கள் கட்சிக்காரர்களுக்கு கமிசன் கொடுப்பதற்காக ஒரு துறை உள்ளது என்றால் அது ஹெச் ஆர் ஆண்டு சி இ தான்.ஆகவே இங்கு நாம் தெளிவாகக் கூறியுள்ளோம். கோயில் நிலங்கள் சூறையாடப்படுகின்றன, ஆலய மரபுகள் மீறப்படுகின்றன. ஆலய வருமானம் சுரண்டப்படுகிறது. பூஜை புனஸ்காரங்கள் நிறுத்தப்படுகின்றன. ஆறு கால பூஜை எங்கு நடக்கிறது? கோயில் கும்பாபிஷேகம் மறுக்கப்படுகிறது.நகைகள் உருக்கப்படுகின்றன . பக்தர்கள் வருகை தவிர்க்கப்படுகிறது.
நமது ஆலய மேம்பாட்டுப் பிரிவு போராட்டம் நடத்திய பிறகுதான் பழனி ஆலயக்
கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிக்கப்பட்டது தணிக்கைக்காக செலவழிக்கப்பட்ட பணம் 2018-19 ல் 19 கோடி ரூபாய் , 2019 ல் 20 கோடிரூபாய் 2020ல்
-21 கோடி.ரூபாய்.
19 கோடிக்கு பில் உள்ளது. ஆனால் 2018 ல் அரசு 4% என்ற கணக்கில் வாங்கியது 92 கோடி; ஆனால் செலவு செய்தது வெறும் 19 கோடி.2019ல் எடுத்தது 87 கோடி ரூபாய் ; 2021 ல் 71 கோடி ரூபாய். ஆக நான்கு மடங்கு கோயில் வருமானத்திலிருந்து எடுத்துள்ளனர்.
திருச்செந்தூரில் பக்தர்கள் வழங்கிய 5,309 மாடுகள் காணவில்லை என்று தணிக்கை அறிக்கை
கூறுகிறது.இப்படி இருக்க என்ன தைர்யத்தில் அமைச்சர் வெள்ளையும் சொள்ளையுமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்? தமிழகத்துக்குத் தேவையில்லாத ஆணி ஹிந்து அறநிலையத் துறை.
இந்தத் துறைக்கு எவ்வளவு வருமானம் வருகிறது? 110 இலிருந்து 140 கோடி ஆண்டு வருமானம் காட்டுகிறன்றனர். 50,000 ஏக்கர் நிலம் உள்ள கோயில்களும் உள்ளன. சில செண்டுகளே உள்ள கோயில்களும் உள்ளன.
அக்கம் பக்கத்தில் நிலவும் வாடகை விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகக் கோயில் சொத்துக்கள் 16 மடங்கு குறைவான வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் வாடகைக்கு விட்டுள்ளனர்.
அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு துறைமுகம் தொகுதியில் நிறைய கட்டிடங்கள்
உள்ளன. அவர் ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் வாடகை வசூலிக்கிறாரா? ஊருக்கு ஒரு நியாயம். தனக்கு ஒரு நியாயமா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதாகும் இது. எனது கணக்குப்படி நியாயமாக 1600 கோடி ரூபாய் வருமானம் வர வேண்டும் இந்த தொகையில் என்னவெல்லாம் செய்யலாம்?முதலமைச்சர் பொழுது விடிந்ததும் ஒரு புது டம்ளர், புதுக் தட்டு சகிதம் வடையை வைத்து’ காலைச் சிற்றுண்டி தருகிறோம் ‘ என்கிறார் நாங்கள் தருகிறோம் 1,600 கோடி ரூபாயில் நல்ல சிற்றுண்டி!
சென்னை காளிகாம்பாள் கோயிலை எடுத்துக் கொள்வோம். அது விஸ்வகர்மா சமுதாயத்தின் நிர்வாகத்தில் உள்ளது.அற்புதமாக நடத்துகின்றனர். சம்மந்தமே இல்லமல் ஹெச் ஆர் ஆண்டு சி இ உள்ளே நுழைகிறது. இது ஒரு அருமையான மாடல். மக்கள் தங்களது கோயிலைத் தாங்களே நிர்வாகம் செய்து கொள்கின்றனர் . ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு சரித்திரம் உள்ளது. மரபு உள்ளது. அதன் அடிப்படையில் இருபதாயிரம் ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது. ஆனால் 1951 ல் அரசு உள்ளே புகுந்தது. சிதம்பரம் தீட்சிதர்கள் விஷயமும் இப்படித்தான்.
தமிழ் நாட்டில் தனியார் நடத்தும் கோயில்கள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன, ‘உள்ளே வராதீர்கள் அது இது ‘என்று எந்த பாகுபாடும் கிடையாது.
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு முருகன் கோயிலுக்குச் சென்றேன்.ஆயிரம் ஆண்டு பழமையானது.சரியாக 11.30 க்கு நடை சார்த்தி விடுவார்கள். உண்டியலில் காசு போடக் கூடாது. ஒரு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் விஐபி கலாச்சாரம் கிடையாது. ஊரே முடிவு செய்து தேர்தல் வைத்து அறங்காவலர்களைத் தேர்வு செய்து அற்புதமாக நடத்துகின்றனர். உலகமே பார்த்து வியக்கும் மாடல் இது.
‘வெளியில் ஹிந்து தர்மத்தை எதிர்ப்போம் பின் வாசல் வழியாக உள்ளே வருவோம்’ என்று நாடகம் ஆடுவது திமுக அரசு.
‘ பாஜக அறநிலையத் துறை வேண்டாம் என்கின்றனர் அதற்குத் தீர்வு தர வேண்டும்’ என்று கேட்கின்றனர்.அதையும் தருகிறோம். சேகர் பாபு விவாதத்துக்குத் தயாராக இருந்தால் நாங்கள் ஒரு ‘கருத்துருவாக்க அறிக்கை'( Concept Paper) தருகிறோம். எவ்வாறு கோயில்களை அரசின் பிடியிலிருந்து வெளியில் கொண்டு வந்து திறம்பட நிர்வகிக்கலாம் , மாற்றி அமைக்கலாம் என்று மாநில அரசுக்குத் தருகிறோம் .அதில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.பலர் இதுதொடர்பாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
திரு டி ஆர் ரமேஷ் போன்றவர்கள் ‘கோயில் பக்தர்கள் சங்கம்’ சார்பாக வழக்கு போடுவது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவது என்று மிகப் பெரிய அளவில் பணி செய்கின்றனர். வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணித்துள்ளனர் . ஒவ்வொரு கோயிலாகக் கண்டு பிடித்து ,கண்டு பிடித்து பணி செய்கின்றனர்.
ஒரே தீர்வு கோயில்களை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே கொண்டு வருவதுதான். திமுகவினரும் , அறநிலையத்துதுறையும் செய்வது ஆண்டவனையே கட்டிப் போட்டு வைத்திருப்பது போல் உள்ளது,
நான் சேகர் பாபு அவர்களைக் கேட்கிறேன். பத்திரிகையாளர்கள் ‘பாஜகவினர் இப்படிப் பேசுகின்றனரே ? என்று அவரிடம் கேட்கலாம். அதற்கு அவர் ‘முறுக்கெல்லாம் சாப்பிடவில்லை’ என்பார் ஆனால் எங்களிடம் ஆவணமுள்ளது.
கும்பகோணம் அருகில் உடையாளூரில் ராஜராஜ சோழனது சமாதி கேட்பாரின்றி அநாதையாகக் கிடக்கிறது. அங்கு ஒரு சிவபெருமானது லிங்கம் உள்ளது யாரோ ஒருவர் கூரை போட்டுள்ளார்.அதற்கு ஹெச் ஆர் ஆண்டு சி இ வருமானத்திலிருந்து ஒரு கூரை போடலாமே? ஆனால் அவர்கள் செய்ய மாட்டர்கள் அவர்கள் எவ்வளவு கமிஷன் வரும் என்றுதான் பார்ப்பார்கள். தஞ்சைப் பெரிய கோயிலைக் காட்டி ‘பூகம்பம் வந்தாலும் கூட ஒன்றும் நடக்காது!’ என்று பொய் ஜம்பம் அடித்துக் கொள்கிறார்கள் .
எந்தக் கட்சியும் எடுக்கத் துணியாத நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம் இது வரை இதைப் பற்றி யாரும் வாயைத் திறந்தது கிடையாது. அதற்கான தைர்யம் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் நாளே சம்மந்தப்பட்ட அமைச்சர் ‘அறநிலையத்துறை வேண்டாம் ‘ என்று கையெழுத்துப் போடுவார்.
பெட்டிப் பெட்டியாக ஆவணங்களைப் பார்த்து மனம் வெதும்புகிறது. கோயில்களுக்காக பாஜக என்ன செய்தது என்று நீங்கள் கேட்கலாம்.
நம் நாட்டிலிருந்து ஏராளமான கடவுளர் திருவுருவச் சிலைகள் பல ஆண்டுகளாகக் கடத்தப்பட்டு வெளி நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.அதை மீட்டு வர முந்தைய அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2014 வரை 13 கடவுளர் மூர்த்திகள் மட்டுமே நமது நாட்டுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டன. மோடி அவர்கள் பிரதமரான பிறகு இது வரை 228 திருவுருவச் சிலைகள் மீட்டு வரப்பட்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து மட்டும் 120 க்கு மேல். மோடி அவர்கள் இதை ஒரு தவமாகச் செய்கிறார்ஆஸ்திரேலியப் பிரதமர் நடராஜர் திரு உருவத்தைத் தானே எடுத்து வந்து பிரதமரிடம் ஒப்படைத்தார்.
200க்கு மேல் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன பெரும் பணம் கொடுத்து கடத்தல்காரர்களிடமிருந்து சிலர் வாங்கியுள்ளனர். ஆனால் நமது பாஜக அரசு ‘அது உங்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் உள்ள விஷயம். ஆனால் திருஉருவச் சிலைகள் எங்களுக்குச் சொந்தமானவை ‘என்று சொல்கிறோம்
திமுக குடும்பத்தினர் ஆறு முறை முகாமைச்சராக இருந்தனர். ஒரு முறையாவது ஒரு சிலையாவது மீட்டெடுத்து வறுவதற்கான முயற்சி எடுத்தார்களா?
1989 ல் யுனெஸ்கோ ( கல்வி மற்றும் கலாசாரத்துக்கான ஐநா சபையின் அமைப்பு ) தமிழ் நாட்டிலிருந்து திருடப்பட்ட கலைப் பொக்கிஷங்கள் மற்றும் கடவுளர் திரு உருவச் சிலைகளின் எண்ணிக்கை 50,000 க்கு மேல் என்று கூறியது 2022 வரை நாம் மொத்தமாக மீட்டெடுத்த பொருட்கள் 241 . 1947 இலிருந்து 2014 வரை 13 கடவுளர் திருவுருவங்கள் மட்டுமே. நமது பிரதமர் எட்டாண்டுகளில் மீட்டெடுத்து வந்தது 228 .! திமுகவுக்குத் தேவை உண்டியல் பணம் .மனம் பட்டர் முறுக்கில் உள்ளது. இன்னும் ஏராளமாக சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இது மிக முக்கிய பிரச்னை.70 ஆண்டுகளாக எண்ணெய் வாங்குவது, சூடம் வாங்குவது போன்றவற்றுக்குக் கூட எக்சியூட்டிவ் ஆபீசர் கையெழுத்துப் போட வேண்டுமா? இதை பேச யாருக்கும் தைரியம் இல்லை. நமது கட்சி ஒரு அற்புதமான தலைவரின் கீழ் இதை மக்களிடையே எடுத்துச் சொல்கிறது. இதைப் பட்டி தொட்டியெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும்.
மக்களே முன்வந்து எங்களுக்கு ஹெச் ஆர் ஆண்டு சி இ துறை வேண்டாம் என்று சொல்லும் நிலை வர வேண்டும். இதுவரை யாரும் செய்யாத வேலையை எடுத்துச் செய்கின்றீர்கள். கட்டாயம் சாப்பிட்டு விட்டு வீடுகளுக்குச் செல்லுங்கள். உங்களுக்கும் உங்களது குடும்பத்துக்கும் ஆண்டவனது அருள் கிடைக்கும்.
உங்களது முயற்சி வெற்றி அடையும் .
1951 இலிருந்து 1,56,0574 ரசீதுகள் முறையற்றவை என்று தணிக்கைக் குழு சுட்டிக் காட்டியுள்ளது. இதன் மொத்தத் தொகை 1302 கோடியே 89 லட்சம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ‘ஏற்கெனவே 2 போலிரோ கார் வைத்திருக்கிறோம்; எங்கள் அதிகாரிக்கு இப்பொது ஒரு இன்னோவா கார் தேவை. அதற்காக உண்டியல் பணத்திலிருந்து 30 லட்சத்து 46 ஆயிரத்து 221 ரூபாய் எடுத்துக் கொள்கிறோம் ‘என்று கூறியுள்ளனர்.அந்தக் கார் யார் வீட்டில் உள்ளது? , கட்சிக்காரர்கள் உபயோகிக்கிறார்களா? தெரியாது.
திருச்செந்தூரில் பக்தர்கள் வழங்கிய 5,309 மாடுகள் காணவில்லை என்று தணிக்கை அறிக்கை கூறுகிறது.இப்படி இருக்க என்ன தைர்யத்தில் அமைச்சர் வெள்ளையும் சொள்ளையுமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்? தமிழகத்துக்குத் தேவையில்லாத ஆணி ஹிந்து அறநிலையத் துறை.
திரு டி ஆர் ரமேஷ் போன்றவர்கள் ‘கோயில் பக்தர்கள் சங்கம்’ சார்பாக வழக்கு போடுவது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவது என்று மிகப் பெரிய அளவில் பணி செய்கின்றனர். வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணித்துள்ளனர் . ஒவ்வொரு கோயிலாகக் கண்டு பிடித்து ,கண்டு பிடித்து பணி செய்கின்றனர்.
கும்பகோணம் அருகில் உடையாளூரில் ராஜராஜ சோழனது சமாதி கேட்பாரின்றி அநாதையாகக் கிடக்கிறது. அங்கு ஒரு சிவபெருமானது லிங்கம் உள்ளது யாரோ ஒருவர் கூரை போட்டுள்ளார்.அதற்கு ஹெச் ஆர் ஆண்டு சி இ வருமானத்திலிருந்து ஒரு கூரை போடலாமே?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் நாளே சம்மந்தப்பட்ட அமைச்சர் ‘அறநிலையத்துறை வேண்டாம் ‘ என்று கையெழுத்துப் போடுவார்.
2014 வரை 13 கடவுளர் மூர்த்திகள் மட்டுமே நமது நாட்டுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டன. மோடி அவர்கள் பிரதமரான பிறகு இது வரை 228 திருவுருவச் சிலைகள் மீட்டு வரப்பட்டுள்ளன.