ரத்தத்தை கொடுங்கள் சுதந்திரத்தை தருகிறேன் என சிங்கப்பூரில் முழங்கினார் நேதாஜி …
முறையாக பயிற்சி பெறாத சில ஆயிரம் வீரர்களை மட்டுமே கொண்டிருந்த இந்திய தேசிய ராணுவத்தை வைத்திருந்த நேதாஜி …
அமெரிக்காவுடன் கூட்டணியில் இருந்த, இரண்டாவது உலகப் போரை நடத்தி அதில் வெற்றி பெற்ற மிகப்பலம் வாய்ந்த பிரிட்டிஷ் படையை வீழ்த்த முடியும் என எப்படி நம்பினார்…
பிரிட்ஷின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியாவின் மீது அவர் எந்த தைரியத்துடன் படையெடுத்து வெற்றி பெற முடியும் என நம்பினார் ?
ஆனால் அவர் இந்தியாவை தாக்கினார். மணிப்பூர் தலைநகர் இம்பாலை கைப்பற்றினார் …
அந்த சமயத்தில் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த அட்லி இந்தியா வந்த போது, அப்போது கொல்கத்தாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர், நீங்கள் ஏன் இந்தியாவை விட்டு வெளியேறுகிறீர்கள் என கேட்டார்
எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றுள்ளீர்கள்… வெள்ளையேனே வெளியேறு இயக்கம் உள்பட காந்தியால் நடத்தப்பட்ட அனைத்து போராட்டங்களும் முடிவுக்கு வந்து விட்டன… அப்படி இருந்தும் நீங்கள் ஏன் வெளியேறுகிறீர்கள் …
நீங்கள் ஏன் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கூறுகிறீர்கள் எனக் கேட்டார்
அதற்கு அட்லி, நீங்கள் சொல்வது போல் இல்லை, நேதாஜி உருவாக்கிய சுதந்திர நெருப்பு பொறி இந்திய ராணுவ வீரர்களின் மனதில் கனன்று கொண்டிருக்கிறது
அதனை 1857க்கு பிறகு முதன்முதலாக பார்க்கிறேன்… 25 லட்சம் இந்திய படை வீரர்கள் இங்கிலாந்துக்காக இரண்டாம் உலகப் போரில் சண்டையிட்டு நாடு திரும்பி இருக்கிறார்கள் …
கராச்சியில் இந்திய கடற்படை வீரர்கள் போராட்டம், ஜபல்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பிரச்சனைகள் காரணமாக ஏராளமானோர் ஐஎன்ஏவில் இணைந்துள்ளனர் …
நாங்கள் புரிந்து கொண்டோம், இந்த நாட்டை இனியும் நாம் ஆள முடியாது என்று … சுபாஷ் சந்திர போசின் நடவடிக்கைகளால் உருவான இந்திய தேசியவாதம் எங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது …
இப்போது நாங்களாகவே முன்வந்து வெளியேறவில்லை என்றால், ரத்தக்களறி போர் நடைபெற்று வெளியேற்றப்படுவோம் என்பதை உண்ர்ந்ததால் உடனடியாக வெளியேற முடிவெடுத்தோம் என்று கூறினார்
ஐ.என்.ஏ வீரர்கள் நேதாஜியை முழுமையாக நம்பினார்கள் … அவர் சொன்னார் ரத்தத்தை கொடுங்கள் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று … எவ்வளவு ரத்தத்தை அவர்கள் சிந்தினார்கள் தெரியுமா ?
ஐஎன்ஏவில் பணியாற்றிய 60 ஆயிரம் வீரர்களின் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் உயிரிழந்த பிறகும் கூட ( 40,000 பேர்) அவர்கள் தொடர்ந்து போர் புரிந்தனர்.
சுபாஷ் சந்திரபோசை மக்கள் ஏன் பின்பற்றினார்கள் தெரியுமா ? ஏனென்றால் அவர்கள் அவரை நம்பினார்கள்? அதனால் அவர்கள் போர்முனையில் இறந்தார்கள்.அவர்கள் இறந்ததால் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது. இந்தியாவை இனி ஒருபோதும் ஆள முடியாது என பிரிட்டிஷாருக்கு புரியவைத்தது. ஆனால் சுதந்திரம் கிடைத்த பிறகு அமைந்த மத்திய அரசு இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை, அவர்களை ராணுவத்தில் இணைத்துக் கொள்ளவும் இல்லை …
2015ல் நேதாஜி பற்றிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பேச்சு …