திருவள்ளூர் மாவட்டம் அருகே தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசும் வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஜனவரி 25ம் தேதியான நாளை மொழிப்போர் தியாகிகளுக்காக திருவள்ளூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில்,
முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர்., அருகில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் அமர்வதற்கு நாற்காலி எடுத்து வருமாறு கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். எனவே கட்சி நிர்வாகி ஒருவர் ஒரே ஒரு நாற்காலியை மெதுவாக எடுத்து வந்துள்ளார்.
இதை கண்டதும் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
அருகிலிருந்த இதர கட்சி நிர்வாகிகள் இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்
தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கேகேஎஸ்எஸ்ஆர் பேப்பரில் அடித்தார், கே என் நேரு கையால் அடித்தார் ராஜகண்ணப்பன் சொல்லால் அடித்தார்,
அமைச்சர் நாசர் கல்லால் அடித்துள்ளார். திராவிட மாடலுக்கு இது மற்றொரு விளக்கம்!.