பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாயைக் கல்லைக் கொண்டு அடிப்பது போல், தனது கட்சிக்காரர் மீது கல் எரிந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
என்ன நடந்தது பார்க்கலாம் …
திருவள்ளூர் அருகே நாளை மு.க ஸ்டாலின் கலந்து கொள்ளும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை ஆய்வு செய்வதற்காக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அங்கே சென்றார்.
அப்போது தான் அமர சேர் எடுத்து வர நாசர் கட்டளையிட, உடன்பிறப்பு ஒருவர் சற்று தாமதமாக எடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த தாமதத்தால் ஆவேசமடைந்த நாசர், கையில் கல்லை எடுத்து கொண்டு, தெரு நாயை கல்லைக் கொண்டு அடிப்பது போல தொண்டனை அடித்து சேர் எடுத்துட்டு வர மாட்டியா என கத்தினார்.
சுற்றி இருந்தவர்கள் அனைவரும் நகைக்க, ஒரு உடன்பிறப்பு கைகளில் சேரை தூக்கி கொண்டு ஓடினார். சமூகநீதி, சமத்துவம் என கொக்கரிக்கும் திமுகவின் அமைச்சர் ஒருவர் சாதாரண தொண்டனிடம் நடந்து கொண்ட விதம் பேசுபொருளாகியுள்ளது. அதேசமயத்தில் அமைச்சர் கல்லை தூக்கி எறிந்த விதத்தை பார்க்கும் போது இதுபோன்று பலமுறை கல், பாட்டிலை வீசி நிபுணத்துவம் பெற்றவர் என்பது மட்டும் தெளிவாகியுள்ளது. ஸ்டாலின் தான் பாவம். மீண்டும் ஒருநாள் தனது தூக்கத்தை தொலைத்துள்ளார்.