திராவிட வடை ஹேஷ்டாக் – டிவிட்டரில் டிரெண்டிங்…

தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சி அமைந்த நாள் முதல் திராவிட நாடு, திராவிட மாடல், திராவிடன் ஸ்டாக் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இந்த சமயத்தில் உச்ச நீதிமன்ற மதுரை கிளை கடந்த 24ம் தேதி அன்று திராவிட மாடலில் மாடல் என்ற ஆங்கில சொல்லிற்கு தமிழ் சொல் என்ன? மாடல் என்ற சொல்லை ஏன் பயன்படுத்துகிறீர்கள், மாடல் என்பதற்கு இணையான தமிழ் சொல்லை பயன்படுத்தலாமே என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று, டிவிட்டரில் திராவிட மாடல் என்பதற்கு பதில் திராவிட வடை என பதிவிட்டு நெட்டிசன்கள் திமுகவினரை கலாய்த்து வருகின்றனர்.

மூல பத்திரம் எங்கே, ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது திமுக தான் அழியும் என பல்வேறு வாசகங்களுடன் தங்களது ஹேஷ்டேக்குகளை பதிவிட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு என கனிமொழி பேசியது, ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி என ஸ்டாலின் பேசியது, ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்து விடுவார் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது உள்ளிட்டவை டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

காங்கிரஸ் சட்டசபை தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை செயலகத்தில் நேற்று தமிழக நலன், தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பர் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மாலை தேநீர் விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதையும் வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கல் எடுப்பதும், அரிவாள் எடுப்பதும் திமுகவினருக்கு புதிதல்ல, திமுக அமைச்சர் நாசர் ஜாலியாக தான் கல் எடுத்து அடித்தார், சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் யாரும் திமுகவில் இருக்கமாட்டார்கள் என்பது போன்ற மீம்ஸ்களும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *