சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய 9 பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில் 3 கீழமை நீதிபதிகள் மற்றும் 5 வழக்குரைஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மற்றோரு மூத்த வழக்குரைஞர் ஆர்.ஜான் சத்யனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலீஜியம் தனியாக மறுபரிந்துரை செய்துள்ளது.
அவரது பெயரை கொலீஜியம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பரிந்துரைத்திருந்தது. ஆனால், சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக அவரது பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
இந்நிலையில், அவரை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது. பிரதமர் மோடி தொடர்பாக ஏற்கெனவே வெளியான செய்தியை மட்டுமே அவர் பகிர்ந்ததாகத் தெரிவித்துள்ள கொலீஜியம், இது நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான விதிகளை மீறிய செயல் அல்ல என்றும் விளக்கமளித்துள்ளது.
கொலிஜியம் முறை எந்த அளவு சீர்கெட்டு உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம் கொலிஜியம் முறையை சரிசெய்ய மோடி அரசு முயற்சிப்பதும் நீதிபதிகள் முரண்டு பிடிப்பதும் தொடர்கின்றன ஆனாலும் நிறைந்து கொலிஜியம் முறையில் மாற்றம் வரும் என தில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.