தமிழகம் மட்டுமல்லாது, தமிழர்கள் வசிக்கும் பிற மாநிலங்களிலும் பொங்கல் விழாவை, பா.ஜ., நடத்தி வருகிறது.
டில்லி பா.ஜ.க தென்னிந்திய பிரிவு சார்பில்,ஜன., 14-ம் தேதி, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் இல்லத்தில் பொங்கல் விழா நடந்தது. இதில், பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மத்திய இணை அமைச்சர் முருகன், வானதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், டில்லி பா.ஜ.க தென்னிந்திய பிரிவு, டில்லி தமிழ் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான பொங்கல் விழா, டில்லி பல்கலை ஹன்ஸ்ராஜ் கல்லுாரியில், நாளை நடக்கிறது.
மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் , ஆர்.எஸ்.எஸ்., வெளிநாட்டு பிரிவான ஹிந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பொங்கல் வைத்தல், சொற்பொழிவு என பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், விழாவுக்கு வரும் மாணவர்கள் வேட்டி – சட்டையும், மாணவியர் சேலையும்அணிந்து வர உள்ளதாகவும், பா.ஜ. க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திராவிட மாடல் அரசு தமிழ் தமிழ் என்று கூவிக்கொண்ட தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி இந்தியா எங்கும் தமிழக கலாச்சாரத்தை கொண்டு செல்வது சிறப்பு என வெளிநாடு வாழ் தமிழர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.