மோடி அரசுக்கு 67% ஆதரவு, கருத்துக் கணிப்பு வெளியிட்டது இந்தியா டுடே – அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்.

குறிப்பிட்ட இடைவெளியில், மக்களின் மனநிலை பற்றி கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டு வருவது இந்தியா டுடே பத்திரிகையின் வழக்கம். இந்தக் கருத்துக் கணிப்புகள், பெரும்பாலும் தவறாக போனதில்லை. அந்த வகையில் இந்த முறை நடந்த கருத்துக்கணிப்பில் முடிவுகளை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.

இதில் 67% மக்கள் மத்தியிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். 50% தாண்டினாலே, சாதனை என்றுள்ள நிலையில் 67% ஆதரவு நிச்சயம் வரும் 2024 தேர்தலில், பாஜகவுக்கு 400 க்கும்   மேற்பட்ட இடங்களை அள்ளி வழங்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கருத்துக்கணிப்பின் விவரம் சுருக்கமாக:

அதில் 67 சதவீத மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. சீனாவின் அச்சுறுத்தல்களை மோடி அரசு திறம்பட எதிர்கொண்டு வருகிறது. என்று பெரும்பாலான மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுவது பாஜக அரசின் மிகப்பெரிய சாதனை என்று மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசியமா என்ற கேள்விக்கு 69 சதவீதம் பேர் அவசியம் என்று பதில் அளித்துள்ளனர். 19 சதவீதம் பேர் மட்டுமே பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஹிஜாபுக்கு தடை விதிப்பது சரியா என்ற கேள்விக்கு 57 சதவீதம் பேர் சரி என்றும் 26 சதவீதம் பேர் தவறு என்றும் பதில் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது சரியான அணுகுமுறையா என்பது குறித்து மக்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு 38 சதவீதம் பேர், சரி என்று பதில் அளித்தனர். அரசு நிர்வாகமே, நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என்று 19 சதவீதம் பேர் வாக்களித்தனர். அரசு மற்றும் நீதித்துறை இணைந்து நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று 31 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

இந்தக் கருத்துக்கணிப்பு சொல்லி இருக்கும் முக்கியமான மற்றொரு விஷயம், இந்த அரசுக்கு எதிர்ப்பு என்பது 18 சதவிகிதம் மட்டுமே என்பது. இதே நிலை நீடித்தால் ஏற்கனவே எதிர்கட்சி அந்தஸ்தை இழந்து விட்ட காங்கிரஸ் முற்றிலும் காணாமல் போய்விடும் என்பது அரசியல் நோக்கர்களின் பார்வை. மாநிலங்கள் கூட, ஒவ்வொன்றாக மத்திய அரசு உடன், இணக்கத்திற்கு வந்து  விடும் என்றும் கூறுகிறார்கள் .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top