பிபிசி  ஆவணப்படம், நோக்கம் என்ன ?  கேரளா, கோவா  ஆளுநர்கள்  கேள்வி?

ஜி 20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்கும் நிலையில், ராகுல் காந்தியின் அரசியல் யாத்திரை நிறைவு பெறும் வேளையில், 2024 தேர்தலில் பாஜகவுக்கு சங்கடம் விளைவிக்க வெளியிடப்பட்டுள்ள பி பி சி யின் போலி ஆவணப்படத்திற்கு, எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்தப் பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான். இது பற்றி அவர்,

மோடி கேள்வி’ ஆவணப் படம், நமது தேசம் தற்போது ஜி20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்கும் நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை வெளிவருவதற்கு இந்த குறிப்பிட்ட நேரத்தை அவர்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள். நமது நாடு சுதந்திரம் பெற்றபோது, நமது நாடு தனது சுதந்திரத்தை பாதுகாக்கும் திறன் கொண்டதாக இல்லை என்று முன்னர் அறிவித்த அந்த நாட்டிலிருந்து இந்த ஆவணப்படம் வெளிவந்துள்ளது. நமது வீழ்ச்சியை பற்றி கனவு கண்டவர்களால் நமது வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்கள் இவ்விவகாரத்தில் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. ஆனால் நம் நாட்டில் உள்ள சிலர் நமது நீதிமன்றங்களை விட பி.பி.சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இருநூறு ஆண்டுகள் நம்மை ஆண்ட நமது பழைய காலனித்துவ எஜமானர்களின் பாரதம் துண்டு துண்டாக உடைந்து விடும் என்றகணிப்பு நிறைவேறவில்லை; நாம் இன்னும் ஒன்றுபட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட ஜனநாயக நாடாக உள்ளோம். இப்போது உலகின் முன்னோடியாக உள்ளோம். பழைய காலனித்துவ எஜமானர்களின்

இந்த ஆவணப்படம் அதன் இழிவான தகுதிக்கு ஏற்பவே நடத்தப்பட வேண்டும்” என கூறினார்.

கேரள ஆளுநரைத் தொடர்ந்து, கோவா மாநில ஆளுநரும்  இந்த ஆவண படத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை,  மோடி கேள்வி’ ஆவணப் படம் பாரதத்தின் இறையாண்மை மீதான தாக்குதல். இது நமது நாட்டை அழிக்கும் காலனித்துவ முயற்சிகளின் ஒரு பகுதி. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், நமது கலாச்சார விழுமியங்களை அழிக்க அவர்கள் தங்களால் இயன்றவரை முயன்றனர். இப்போது நாம் உலகின் 5வது பொருளாதார சக்தியாக இருக்கிறோம். நமது முன்னாள் காலனித்துவ எஜமானரான பிரிட்டனை முந்திக்கொண்டு நாம் இந்த நிலையை அடைந்துள்ளோம். காலனித்துவ சக்திகள் நமது இந்த வளர்ச்சியில் மகிழ்ச்சியடையவில்லை என்பதை இது வெளிக்காட்டுகிறது” என கண்டித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top