திமுகவில் இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் கல் எறிந்தும், கையால் தாக்குவதிலும்,வார்த்தையால் வசை பாடுவதிலும் தங்கள் சாகசங்களை வெளிப்படுத்திவரும் நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி. தியாகராஜன் சில சமயங்களில் உண்மையை பேசி வருகிறார். வாரிசு என்ற பெயரில் தத்தியாக இருப்பவர்களை வைத்து ஆட்சி செய்ய முடியாது என்று கூறியவர். தற்போது, சமூக நீதிக்கு முன்னோடி நீதிக்கட்சிதான் என்றும் ஈ.வெ.ரா 1921 ல் காங்கிரஸில் இருந்தார் என்ற உண்மையைக் கூறி திக, திமுகவின் போலி பிம்பத்தில் கல்
எறிந்து தகர்த்துள்ளார்.
சென்னை, பல்கலையின் சட்ட படிப்புத்துறை சார்பில் ” ஜனநாயகம் மற்றும் சமூக நீதியில்
ஒருமித்த கருத்தும், சர்ச்சைகளும்” என்ற தலைப்பில் நடைபெற்ற இருநாள் கருத்தரங்கில்
கலந்துகொண்ட தமிழக நிதியமைச்சர் பி.டி. தியாகராஜன் பேசியதாவது: ” சமூக நீதியை
பாதுகாக்கும் திட்டங்கள் மற்றும் அதில் ஈ.வெ.ராமசாமியின் திராவிடர் கழகம் மற்றும்
சுயமரியாதை இயக்கத்தின் பங்களிப்பு குறித்து, சில முக்கியமான விளக்கங்கள் அளிக்க
விரும்புகிறேன். தமிழகத்தில், 1921ல் நீதிக் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது, ஈ.வெ.ரா., நீதிக் கட்சியில் இல்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பெண்களுக்கு கட்டாய ஓட்டுரிமை, கட்டாய தொடக்க கல்வி உரிமை, ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு ஆகிய சமூக நீதியை காக்கும் முக்கிய முடிவுகள், நீதிக் கட்சி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டவை. இந்த முடிவுகள், ஈ.வெ.ராமசாமி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறும் முன், நீதிக் கட்சி ஆட்சியில் நடந்தவை. இவற்றை யாரும் மறந்து விடக் கூடாது. எனவே, அப்போதைய நீதிக் கட்சி தலைவர்கள், சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பே சமூக நீதியை காத்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார். ஈ.வெ.ராவுக்கு யுனெஸ்கோ விருது, மத்திய அரசின் திட்டங்களில் எல்லாம் லேபிள் ஒட்டிக்கொள்வது என தி.க மற்றும் திமுகவின் பாரம்பரியமே அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டி தங்களை சுய விளம்பரம் செய்துகொள்வதும், பொய்யை ஓயாமல் சொல்லி, மக்களை நம்பவைப்பதும்தான். சமூகநீதியின் முன்னோடி யார் என்பதை டபுள் வாட்ச் அமைச்சர் அம்பலப்படுத்தியுள்ளார். அசிங்கப்பட்டு நிற்கிறது திராவிட மாடல் !