கரூர் சாராய அமைச்சரின் சொந்த ஊர். இங்கு நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.
இதில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முக வடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவகுமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டதை பாராட்டி வழங்கப்படுவதாக பாராட்டு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, குடியரசு தினத்தன்று பாராட்டு பத்திரம் வழங்குவது, அரசு நிர்வாகத்தின் வழக்கம். அந்த வகையில், அதிகம் குடிகாரர்களை உருவாக்கிய, அதிகாரிக்கு பாராட்டு பத்திரம் வழங்கி, திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளது. சாதனை நிகழ்வு இடம், டாஸ்மாக் மந்திரியின் தலைமையகம். இனி எதற்கெல்லாம் பாராட்டு பத்திரம் வருமோ என்ன கரூர் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த செய்தி பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில் 2 மேற்பார்வையாளர், விற்பனையாளர் உள்ளிட்ட 4 பேருக்கு வழங்க பட்ட சான்றிதழ் திரும்ப பெறப்பட்டு, அதில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டி கொடுத்த என்ற வார்த்தைகளுக்கு மாற்றாக டாஸ்மாக் நிர்வாகத்தில் சிறந்த பணிக்கான பாராட்டு சான்றிதழ் என மாற்றப்பட்டு 4 பேருக்கும் கரூர் மாவட்ட நிர்வாகத்தால் மீண்டும் வழங்கபட்டது. இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறி அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.