திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் வி.கே.சிங், “கேந்திர வித்யாலயா பள்ளிகள் தொடங்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் இடத்தை தேர்வு செய்து தந்தால் அதற்கான பணிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
பணிகள் முடிந்ததும் விரைவில் விமான நிலையம் திறக்கப்படும். சேலம் – சென்னை எட்டு வழிச்சாலையை பசுமை வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளில் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை தமிழக அரசுதான் தேர்வு செய்து கொடுத்தது. அதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை” எனக் கூறினார்.