கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட குடியரசு தின ஊர்தி சர்ச்சையை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. தொடர்ந்து 3 வருடங்களாக குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழ்நாட்டு அரசின் அலங்கார ஊர்தி கடந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டது. இதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய திராவிட வடை அரசு, மத்திய அரசு திட்டமிட்டே தமிழ்நாட்டின் ஊர்தியை நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தது.
ஆனால் அதே சமயத்தில் இது குறித்து விளக்கம் அளித்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடந்த ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பாக தமிழ்நாடு ஊர்தியை ஆய்வு செய்த நிபுணர் குழு, தலைப்புக்கு ஏற்ற வகையில் இல்லை எனக் கூறி நிராகரித்ததை சுட்டிக் காட்டினார். மேலும் இதேபோன்று தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்காததையும் சுட்டிகாட்டினர்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஆண்டும், குடியரசு தின அணிவகுப்பில் 19 மாநிலங்களின் ஊர்திகள் மட்டுமே பங்கேற்றன. அதே சமயத்தில் கடந்த ஆண்டு நிராகரிப்பட்ட ஊர்தியை திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க செய்தது. அப்போது தான் ரகசியம் வெளிப்பட்டது. அலங்கார ஊர்திகளுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற தலைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் இந்திய சுதந்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தரும், சுதந்திரப் போராட்டத்துக்கு துளியும் தொடர்பு இல்லாதவருமான ஈவெராவின் சிலை, பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த காயிதே மில்லத்தின் சிலை அதில் இடம் பெற்றிருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டு அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதன் வடிவமைப்பு குறித்த எதிர்பார்ப்பு எகிறியது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தமிழ்நாடு கலாச்சாரம் என்ற தலைப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி பங்கேற்றது. பெண்களுக்கு அதிகாரமளித்தலில், ஒளவையார்,வேலு நாச்சியார், முத்துலட்சுமி ரெட்டி, எம்.எஸ் சுப்புலட்சுமி உள்ளிட்டோரின் உருவ பொம்மைகள் இடம் பெற்றிருந்தன.
அதே சமயத்தில் தமிழ்நாட்டு கலாச்சாரம் என்ற பார்வையில் பார்க்கும் போது, அலங்கார ஊர்தியை சுற்றி நடனமாடியவர்கள், ஊர்தியில் அமர்ந்து இசைக்கருவிகள் வாசித்தவர்கள் என அனைவரின் நெற்றியிலும் திருநீறு பட்டை இடப்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ஊர்தியில் தஞ்சை பெரிய கோவிலின் மாதிரி இடம் பெற்றிருந்தது. இது தெய்வ வழிபாடே தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்பதை ஊர்தியின் தோற்றம் நமக்கு நன்கு உணர்த்தியது.
ஜல்லிக்கட்டில் மாட்டுக்கு நெற்றியில் பட்டை இடக் கூடாது என உத்தரவு பிறப்பித்தவர்களும், சூரியக்கடவுளுக்கு பூஜை செய்யாமல், பொட்டு வைக்காமல் சமத்துவ பொங்கல் கொண்டாடியவர்களும், ஓட்டுக்காக மற்ற மத மேடைகளில் இந்து மதத்தை இழிவாக பேசிய இந்த திராவிட வடை அரசை சேர்ந்தவர்கள் தான் அலங்கார ஊர்தியை இவ்வளவு தெய்வீகமாக வடிவமைத்துள்ளனர். ஒருவேளை கடந்த ஆண்டை போலவே தலைப்புக்கு சம்மந்தம் இல்லாமல் வடிவமைத்திருந்திருந்தால் இந்த ஆண்டும் நிராகரிக்கப்பட்டிருக்க கூடும் என்ற அச்சத்தின் வெளிப்பாடு அலங்கார ஊர்தி வடிவமைப்பில் நன்றாகவே தெரிந்தது.