தொழில்துறையினருக்கு பத்ம விருதுகள் !

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் மக்கள் சேவை, தேச சேவை, பொருளாதாரம், கலை, கலாச்சாரம், எழுத்துத்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு தமிழகத்தின் 6 நபர் உட்பட 106 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த 25.01.23 அன்று அறிவித்தது. நேற்றைய தினம், பத்ம விருது பெற்ற சிலர் குறித்து பிரசுரித்திருந்தோம். அதன்தொடர்ச்சியாக, இன்று தொழில்துறையில் சிறந்து விளங்கும் வல்லுனர்கள் குறித்து காண்போம்.

குமார் மங்கலம் பிர்லா:

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமாரமங்கலம் பிர்லா, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், கிரசிம் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடெயில், ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் குழுமங்களின் இயக்குனர் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். சிஏ படித்தவரான இவர், லண்டன் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ படித்தவர். இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டு உள்ளது.


ராகேஷ் ஜுன் ஜுன்வாலா:

சமீபத்தில் மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்கலாம். பில்லியனரான இவர், பாரதத்தின் வாரன் பபெட் என அழைக்கப்பட்டவர். சாதாரணமான குடும்ப பின்னணியை சேர்ந்த ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, தனது நிகர சொத்து மதிப்பினை வெறும் 5,000 ரூபாயில் இருந்து 5.5 பில்லியன் டாலராக உயர்த்தியவர். அதுவும் பங்கு சந்தையில் புத்திசாலித்தனமான முதலீடுகளை செய்து அதன் மூலம் இந்த மாபெரும் வளர்ச்சியை கண்டவர்.


அரீஸ் கம்பட்டா:

இவரது ரஸ்னா குழுமம் குளிர்பான பிராண்டிற்கு மிக பிரபலமான ஒன்றாகும். ரஸ்னா குழுமத்தின் தலைவரான மறைந்த அரீஸ் கம்பட்டாவின் தலைமையின்
கீழ் 53 நாடுகள் வரை தனது வணிகத்தை விரிவாக்கம் செய்திருந்தது ரஸ்னா குழுமம். இவர்களை தவிர இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாரயண மூர்த்தியின் மனைவி, சுதா மூர்த்திக்கும் பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top