பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 2024க் கான மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்றால், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் நீடிப்பார் என்று இந்தியா டுடேயின் #மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய டுடே நடத்திய #மூட் ஆஃப் தி நேஷன் என்ற கருத்துக் கணிப்பில் இன்றைய தினம் லோக்சபா தேர்தல் நடந்தால், பாரதிய ஜனதா கட்சி 284 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது. ஆர்டிகள் 370 வது பிரிவை ரத்து செய்தது, தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ராமர் கோவில் கட்டுதல் உள்ளிட்டவற்றால் பாஜக இந்த மதிப்பெண்களை பெற்றதாக இந்தியா டுடே கூறியுள்ளது.
ஆனால் தற்போதைய நிலவரப்படி, பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் அடையாளம் விரிவடைந்துள்ளது என்றும் இந்தியா முழுவதிலும் நடத்தப்பட்ட சர்வேயில் 72 சதவீதம் பேர் பிரதமரின் செயல்பாடுகளால் திருப்தி அடைந்துள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் சிறந்த பிரதமர்கள் பட்டியலில் தற்போதைய பிரதமர் மோடிக்கு 47 சதவீதம் வாக்குகளும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 16 சதவீத வாக்குகளும், இந்திரா காந்திக்கு 12 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. பாஜக நாளடைவில் தனது விஸ்வரூப வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் . நாட்டின் பொருளாதாரம், நிதி நிலைமை வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்க இருப்பதாலும் மோடியின் செல்வாக்கு உலக நாடுகள் மத்தியில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.