சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் அனுமதியின்றி வைத்த ஈ.வெ.ரா., சிலையை அகற்றியதற்காக, தாசில்தார், டி.எஸ்.பி., மாற்றப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர், உதயம் நகரில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி இளங்கோவனின் புதிய வீட்டு முகப்பில், மார்பளவு ஈ.வெ.ரா., சிலையை நிறுவி இருந்தார்.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அரசிடம் அனுமதி பெற்றுதான் சிலை வைக்க முடியும் எனக்கூறி, தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., கணேஷ்குமார் தலைமையில் சென்ற அதிகாரிகள் நேற்று முன்தினம் சிலையை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக, தாசில்தார் கண்ணன், வன திட்ட அலுவலராக மாற்றப்பட்டார். டி.எஸ்.பி., கணேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட சிலையை அகற்றிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள
தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.