‘என்னை இந்து என்று அழைக்கவும்’: கேரள ஆளுநர் விருப்பம்

என்னை இந்து என்று அழைப்பதையே பெரிதும் விரும்புவதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்து மாநாட்டில் அவர் இதுகுறித்து மேலும் பேசியது.
இந்து என்று கூறுவது தவறு என்று உணரும் வகையில் மாநிலத்தில் சதி நடந்து வருகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் சையத் அகமது கான் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே தான் ஒரு இந்து என்று அழைக்கப்படுவதையே விரும்பினார். தற்போது அதனை இங்கு எடுத்துக்காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்து என்பது புவியியல் ரீதியான சொல். இந்தியாவில் பிறந்தவர்கள், இங்கு விளையும் உணவை உண்டு வாழ்பவர்கள், இந்திய நதிகளின் நீரை பருகுபவர்கள் அனைவருமே இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ள தகுதியுடையவர்களே. எனவே, இந்து என்பதை நாம் இங்கு மதச் சொல்லாக பிரித்துப் பார்க்கக் கூடாது. அந்த வகையில் ஆர்ய சமாஜ் உறுப்பினராகிய நீங்கள் ஏன் என்னை இந்து என்று அழைக்கவில்லை என்பதே வருத்தமாக உள்ளது. அப்படி அழைப்பதால் தவறு எதுவும் இல்லை. அழைக்காமல் இருப்பதுதான் தவறு. இவ்வாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top