தலையில் அடித்தது,கல்லால் அடித்ததைத் தொடர்ந்து அரிவாள் வெட்டும் திராவிட மாடல்தான் – டி ஆர் பாலு !

”தி.க., தலைவர் வீரமணி மீது எவனாவது கையை வைத்தால், அவன் கையை வெட்டுவேன்,” என, தி.மு.க., பொருளாளரும், எம்.பி., யுமான டி. ஆர்.பாலு பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சேது சமுத்திரம் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மதுரையில் தி.க., சார்பில், நேற்று
முன்தினம் நடந்த மாநாட்டில், டி.ஆர்.பாலு பேசியதாவது:

‘ராமாயணம் ஒரு கட்டுக் கதை’ என, நேரு கூறினார்; எல்லா தலைவர்களும், நிபுணர்களும்
கூறியதை ஏற்றுக் கொள்ளாத நண்பர்கள், அரசியல் ரீதியாக சிந்திக்க வேண்டும். ஆனால்,
முட்டாள்தனமான சிந்தனை இருக்கக் கூடாது.
ஆறு மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அப்போது, ராமர் பாலம் இருப்பதாக
யாரும் கூறவில்லை. திட்டம் துவக்கி பணி நடந்தபோது, ஓடுகிற ரயிலை சங்கிலியை பிடித்து
இழுத்து நிறுத்துவதுபோல் நிறுத்தினர்.
தமிழர்கள் பாவம் பொல்லாதது. நீங்கள் இந்த முறை ஜெயிக்கவே மாட்டீர்கள். நான் வயிறு
எரிந்து போய் சொல்கிறேன். சாபத்தை எல்லாம், வீரமணி நம்ப மாட்டார். ஆனால், நான் சாபம் விடுகிறேன்.

நான் தவறு நடக்கும்போது முரடானக இருப்பேன். என்னால் பார்த்து கொண்டிருக்க முடியாது. உங்களை யாராவது சீண்டினால், நான் சும்மா இருக்க முடியுமா? உங்களால் திருப்பி அடிக்க முடியாது; பலம் கிடையாது.

ஆனால், எனக்கு பலம் இருக்கு; திருப்பி அடிப்பேன். என்னுடைய கட்சி தலைவரை சீண்டினால், என் கட்சி தலைவர் கிட்டே வந்தால், எவனாவது ஒருத்தன் வீரமணி மேல் கையை வைக்க வந்தால், அவர் கையை வெட்டுவேன்.
இது என்னுடைய தர்மம். அவன் கையை வெட்டுவது என் நியாயம். நியாயம் இல்லை என நீங்கள் சொல்லலாம்.

அதை அப்புறம் சொல்லுங்க; கோர்ட்டில் போய் சொல்லுங்க; ஆனா வெட்டிடுவேன் என்று கூறினார் மேலும் தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு பேசுகையில், ‘ஜி.எஸ்.டி., சாலையில் இருந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என, மூன்று தெய்வங்களின் கோவில்களையும் இடித்தேன்
என்று பேசியுள்ளார்.

இதை கண்டித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவில்களை, தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து விடுவிக்க
வேண்டும் என்பதற்கு, டி.ஆர்.பாலுவின் கோவில் இடிப்பு பேச்சு சரியான காரணமாக அமைந்துள்ளது’ என்றார்.
டி ஆர் பாலு சாபம் விட்டதை பற்றி சமூக வலைதளத்தில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.
முந்தைய திமுக – காங்கிரஸ் ஆட்சியில் சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறேன் என 2000 கோடி ரூபாய்களுக்கு மேல் மக்கள் பணத்தை வீணடித்து கடலை ஆழப்படுத்தும் பணியை செய்தார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி பாணியில் சர்க்கரையை எறும்பு தின்றுவிட்டது என்பது போல கடலை ஆழப்படுத்தியதை காண்பியுங்கள் என்றால் அதை மணல் மீண்டும மூடிவிட்டது என்று டி ஆர் பாலு கூறுவது போல மீம்ஸ்கள் தயாரித்து உளவ விட்டுள்ளனர். முன்பு போல தற்போது பெரிய அளவில் கொள்ளை அடிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தால்தான் அவர் சாபம் விட்டுள்ளார்; “பத்தினி சாபம் பலிக்கலாம், பாலுவின் சாபமெல்லாம் பலிக்காது”
என்று கேலி பேசி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top