சென்னை கொட்டிவாக்கத்தில் ஈ-ஷ்ராம் மற்றும் செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிகிச்சை முகாம்களில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார். மேலும் அவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கிஷன் ரெட்டியும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியும் கலந்து கொண்டார்.