ஜம்மு நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஆரிப் என்னும் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். என காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் நேற்று ஜம்முவில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ‘ஜம்முவின் நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஆரிப் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து வந்த உத்தரவுகளுக்கு ஏற்ப ஆரிப் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த மே மாதம் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்ற பக்தர்களின் பேருந்தில் குண்டுவெடித்ததில் 4 பேர் இறந்தனர். 24 பேர் காயம் அடைந்தனர்.
ஆரிஃப் கடந்த 2010-இல் தற்காலிகமாக ஆசிரியா் பணியில் சோ்ந்துள்ளாா். 2016 -ஆம் ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணி நிரந்தரம் பெற்றுள்ளாா். அப்போது, அவருக்கு உறவினா் ஒருவா் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தொடா்பு கிடைத்துள்ளது. அவா்களால் மூளைச் சலவை செய்யப்பட்டு லஷ்கா் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளாா். இதுபோன்ற பல்வேறு தாக்குதல்களில் தனது பங்கு இருப்பதாக ஆரிப் ஒப்புக்கொண்டுள்ளார். ஆரிப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’. என தெரிவித்திருந்தார்.
காஷ்மீர்க்கு வழங்க பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய மோடி அரசு ரத்து செய்தது இந்த நிலையில் இதாய் எடுத்து காஷ்மீரில் நிலவி வந்த பதற்றமான நிலை மாறி தற்போது இந்தியாவின் பிற தேசங்களில் வாழும் மக்களை போல் இயல்பு நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில் ராகுல் தேசம் முழுவதும் நடந்து செல்வதாக சொல்லி பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில் கடைசி நாளில் காஷ்மீரில் பயணத்தை முடிக்கும் பொது தனது சகோதரியுடன் பனி கட்டிகளை வைத்து விளையாடினார். மோடி அரசு பதவி ஏற்கும் முன் காஷ்மீர் என்றாலே பயங்கரவாதம் என்று இருந்த நிலையில் ஒரு எம்.பி., தனது சகோதரியுடன் விளையாடும் அளவிற்கு மாறி இருப்பதை புரிந்து கொண்டு அரசியல் வாதிகள் செயல் பட வேண்டும். தொடர்ந்து காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணித்து அவர்கள் அனைவரையும் கைது செய்தும் வருகிறது, நமது இந்திய ராணுவம்.