சேலம் மாநகராட்சியின், 47வது வார்டு தி.மு.க., கவுன்சிலர், கணவர் உள்ளிட்ட 4 குடும்பஉறுப்பினர்கள் மீது, போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம், குகை, ஆண்டிப்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில், மாநகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கட்டிடம் அமைக்க கொண்டு வரப்பட்டிருந்த ஜல்லிக் கற்கள், மணலை, அந்த வார்டின் தி.மு.க., பிரதிநிதி சுதந்திரம் 40, அவரது மனைவியும் மாநகராட்சி 47வது வார்டு தி.மு.க., கவுன்சிலருமான புனிதா 38, சுதந்திரத்தின் தந்தை துரை 58, சுதந்திரத்தின் தங்கை தாமரைச்செல்வி 38, ஆகியோர் சொந்த பயன்பாட்டுக்கு, ஜன., 31ல் எடுத்துச் செல்ல முயன்றனர்.
அதை, அந்த பகுதியைச் சேர்ந்த நவமணி என்பவரின் தலைமையில் 15 பேர் சென்று தடுத்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இதையடுத்து, போட்டியாக நவமணி தலைமையிலான கும்பலும், ஜல்லிக் கற்கள், மணலை எடுத்துச் செல்லத் தொடங்கியது. கவுன்சிலர் புனிதா, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் கோவிந்தன், பிரதாபன், ராஜா, வெண்மதி உட்பட, 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த தகவல் பரவியதால் நவமணி தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம்(1.02.2023) இரவு, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானபடுத்தி. நவமணியிடம் இருந்து புகார் பெற்று அதன்படி, சுதந்திரம், புனிதா, துரை, தாமரைச்செல்வி மீது, அரசு சொத்தை அபகரிக்க முயற்சித்தல், கொலை மிரட்டல், திருடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திமுக என்றாலே கட்ட பஞ்சாயத்து, திருட்டு, அடி, தடி, வெட்டு குத்து, என பெரிய லிஸ்டே போடும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது, சமீபத்தில் சின்னவர் உதயநிதி மேடையில் இருக்கும் போது அமைச்சர் கே.என் .நேரு தொண்டர் ஒருவரை தலையில் அடித்து போடா என சொன்னதும், சேலம் திருமலைகிரியில் கோவிலுக்குள் சென்ற பட்டியல் இன இளைஞரை ஆபாச வர்த்தைகளால் திட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் தற்போது திமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் மீது திமுக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. தொடர்ந்து திமுக நிர்வாகிகள் மற்றும் அரசின் மீது வாக்களித்த மக்கள் சீ.ச் சீ., என்னும் மன நிலைக்கு வந்து விட்டனர்.