அதானி குழுமத்தின் பங்கு மதிப்பை சீர்குலைத்து, அதன் வாயிலாக லாபம் அடைந்ததாக, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனத்தின் நிறுவனர் நேதன் ஆண்டர்சன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம், அதானி குழுமங்கலின் மீது பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த
விவகாரத்தை கிளப்பி, பார்லிமென்டை இரண்டு நாட்களாக முடக்கின.
எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார் அதில்,
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நேதன் ஆண்டர்சனும், அவரைச் சேர்ந்தவர்களும், ‘ஷார்ட்
செல்லிங்’ எனும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள், அதானி குழுமத்தின் பங்கு மதிப்பை செயற்கையாக சீர்குலைத்து, அதன் வாயிலாக அதிக
லாபம் அடைந்துள்ளனர்.
இதை இவர்கள் உள்நோக்கத்துடன் செய்துள்ளனர். இதன் வாயிலாக, அப்பாவி முதலீட்டாளர்களையும், இந்திய பங்குச் சந்தையையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதற்காகவே இவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, அதானி குழுமத்துக்கு எதிரான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதை செய்துள்ள நேதன் ஆண்டர்சன் மீது, மோசடி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான
விசாரனை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என முன்கூட்டியே யூகித்து வைத்து அதன் பங்கு விலை
குறையும் போது வாங்கி, பங்கின் விலை மீண்டும் உயரும் போது விற்பனை செய்வார்கள். இதன் முகுளம் அதிக லாபம் பெறலாம். இந்த நடவடிக்கைக்கு, ‘ஷார்ட் செல்லிங்’ என பெயர். நேதன் ஆண்டர்சனும், அவரைச் சேர்ந்தவர்களும் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில், அதிக அளவிலான லாபம் சம்பாதிக்க சதி செய்து, இதற்காக அதானி குழுமத்துக்கு எதிரான அறிக்கையை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளதாகவும், பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.
‘ஹிண்டன்பர்க்’ நிறுவனம் அமெரிக்காவல் மூன்று கிரிமினல் வழக்குகளை சந்தித்து வருவதும் பல ஆண்டுகளாக அதன் வங்கி கணக்கு முடக்கப்பட்டிருந்ததும், நியூ யார்க் பங்கு சந்தையில் பட்டியல் இடப்பட்டகம்பெனிகள் பற்றி ஹிண்டன்பர்க் நிறுவனம் பேசக் கூடாது என தீர்ப்பு வெளியாகி இருப்பதும் தற்போது தான் இந்திய மக்களுக்கு தெரிய வந்துள்ளது.குறிப்பிடத்தக்கது.