பிற மத வழிபாட்டுத் தலங்களை இடித்தேன் என கூற முடியுமா – டி.ஆர்.பாலுவுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

நுாறு ஆண்டு பழமையான கோவிலை இடித்தேன் எனக்கூறும் தி.மு.க., – எம்.பி., – டி.ஆர்.பாலுவால் பிற மத வழிபாட்டுத் தலங்களை இடித்தேன் என கூற தைரியம் உண்டா, என, வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பிள்ளார்.

பழநியில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

பழநி முருகன் கோவில் கும்பாபிஷேகம் அவசரமாக நடந்துள்ளதாகவும் .

‘கடவுள் மீது நம்பிக்கை இல்லை’ என்பவர்கள் தான், கும்பாபிஷேகத்தன்று
உறவினர்களையும், குடும்பத்தாரையும் கோவிலுக்கு அழைத்து வந்து உள்ளனர்.
கோவிலுக்கு வரும் போது சுயநலமாகவும், கோவிலுக்கு வெளியே சிறுபான்மையினரின் ஓட்டுக்காக,
ஹிந்து மதத்திற்கு எதிராகவும் பேசுகின்றனர்.

பழமையான கோவில்களை பாதுகாக்க வேண்டும்.
‘100 ஆண்டு கால கோவிலை இடித்தேன்’ என, தி.மு.க., – எம்.பி., – டி.ஆர்.பாலு பெருமையுடன்
கூறுகிறார்.

இது போல, ‘மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களை இடித்தோம்’ என கூற, அகற்ற சொல்ல
அவருக்கு தைரியம் உள்ளதா?

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top