உலகின் முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம், அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. கடந்த ஜன. 26 முதல் 31-ம் தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்த நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி தரவரிசை பட்டியலை ‘மார்னிங் கன்சல்ட்’ வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 78 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்
இந்திய பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. சர்வதேச அரங்கில் அசைக்க முடியாத தலைவராக அவர் உருவெடுத்து வருகிறார்.