வாணி ஜெயராம்: 1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசை அமைப்பில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம். அண்மையில் குடியரசு தினவிழாவையொட்டி அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பிப்ரவரி 4 அன்று அவர் காலமானார்.
தலைவர் அண்ணாமலை அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தன் ட்விட்டர் பதிவில் தன் அஞ்சலிக் குறிப்பை எழுதியுள்ளார்.
கண்ணுறக்கம் தொலைத்த விழிகளுக்கு எல்லாம் தன் காந்தக் குரலால் கனிவான உறக்கம் தந்த கானக் குயில், தன் பாடும் பணியை முடித்துவிட்டு, பறந்து போனது.
இதயங்களை இனிய குரலால் வருடிய இசைவாணி மீளாத்துயிலில் மூழ்கி இருப்பதை கண்டு மீளாத்துயரில் மூழ்கியது தமிழகம். காற்றில் அவர் கானம் கேட்டு கண்கள் பனித்தது. ஆற்றாத மனத் துயரோடு, அஞ்சலி செலுத்தி வந்தேன்.
வாணி ஜெயராம் அவர்களின் ஆன்மா அமைதியில் இளைப்பாற பிரார்த்தனை செய்கிறேன்.
ஓம் சாந்தி.