கடந்த 2009 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரயில்வே நிதியை ஒப்பிடும் போது தற்போதைய நிதியாண்டில் மத்திய அரசால் ரயில்வே விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்கு ரூபாய் ₹6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவொரு சாதனை அளவாகும். ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் இன்னமும் விரைவாக நடைபெறும்.