சீனா, பிற நாடுகளின் 138 சூதாட்ட செயலுக்கு  தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

சீனா உட்பட பிற வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. கடன் செயலிகள் மூலம் கடன்பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. அதேபோல, சூதாட்டச் செயலிகளால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது போன்ற சீனாவின் செயலிகள் பல இந்தியாவில் புழக்கத்தில் விட்டுள்ளார்.  இதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறப்பட்ட நிலையில், சூதாட்ட செயலிகளைக் கட்டுப்படுத்த மத்திய மோடி அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் செயலிகளை முடக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இதையடுத்து, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சீனா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட 232 செயலிகளை முடக்கியுள்ளது. இவற்றில் 138 செயலிகள் சூதாட்டம் தொடர்பானவை என்றும், 94 செயலிகள் அங்கீகரிக்கப்படாத கடன் சேவையை வழங்கும் நிறுவனம் என்றும் தெரிவித்திருந்தனர்

2020 ஜூன் மாதத்தில் லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இத்த மோதலில்  பாரத நாட்டின் வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். எல்லையில் சீனாவின் அத்துமீறல் காரணமாக, டிக்டாக், வி-சாட், பப்ஜி உள்ளிட்ட பிரபலமான சீனாவின் செயலிகளை, மத்திய அரசு தடை செய்தது.நாட்டின் பாதுகாப்புக் கருதி, கடைசி 3 ஆண்டுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் இந்தியாவின் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பயன்பாட்டில் உள்ள நிலையில், அவற்றைக் கண்டறிந்து முடக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top