தொடர்ந்து மக்களை ஏமாற்றி வரும் திராவிட அரசு தைப்பூசத் திருநாளுக்கான சிறப்பு பேருந்துகளில் இலவச பயணம் இல்லை என மீண்டும் ஏமாற்றி இருக்கிறது.
மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் என்ற வாக்குறுதியை கொடுத்து வெற்றி பெற்ற திமுக அரசு வெற்றி பின் உடனேயே ஒயிட் போர்டு எனப்படும் சாதாரண பேருந்துகளில் மட்டும் தான் இலவச பயணம், டீலக்ஸ் பேருந்துகள் கிடையாது என்ற அறிவிப்பின் மூலம் முதல் ஏமாற்று வேலையை செய்தது.
இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் இருந்த ஒயிட் போட் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து பெண்களை பெரும் கூட்டம் நெரிசலில் அவதிரும்படியாக இரண்டாவது ஏமாற்று வேலையை செய்தது.
அடுத்தடுத்து விழா காலங்களில் வழக்கமாக இயங்கும் வழித்தட பேருந்துகளிலேயே சிறப்பு பேருந்து என்ற ஸ்டிக்கர் ஒட்டி அதிலும் இலவச பயணம் இல்லை என்ற அடிச்சாட்டியம் செய்தது.
அந்த வரிசையில் தற்போது தைப்பூச விழாவிற்காக பழனி மருதமலை திருப்பரங்குன்றம் உள்ளிட்ட விசேஷமான முருகப்பெருமானின் தலங்களுக்கெல்லாம் பெருமளவில் பக்தர்கள் குவிவதும் அதிலும் பெண்கள் கூட்டம் குவிவதும் தெரிந்து வேண்டுமென்றே தைப்பூசத் திருநாளுக்கான சிறப்பு பேருந்துகளில் இலவச பயணம் இல்லை என்று தமிழகப் பெண்களை அவமதித்திருக்கிறது.
ஒவ்வொரு வகையிலும் தனது இந்து விரோத்தை வெளிப்படுத்தும் திராவிட மாடல் அரசு கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு இலவச பயணம் கிடையாது. என இப்போது வெளிப்படுத்தி உள்ளது.இந்த நயவஞ்சகத்தை, நம் தாய்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும் என இந்து இயக்க பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.