சாராத சீட் பண்ட் பண மோசடி வழக்கில், நளினி சிதம்பரம் உள்ளிட்ட பயனாளிகளின் ரூ .6 கோடி மற்றும் அவர்களின் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது.
மேற்கு வங்கம், அசாம் மற்றும் ஒடிசா ஆகிய மாநில மக்களிடம் முதலீடுகளுக்கு அதிக வட்டி வாங்கி தருவதாக கூறி சாரதா சிட் பண்ட் என்ற நிறுவனம் 2013-ம் ஆண்டு வரை 2,459 கோடி வசூல் செய்தது. இதில் முதலீட்டாளர்களுக்கு இதுவரை வட்டியை சேர்க்காமல் ரூ.1,983 கோடியை திருப்பித் தரவில்லை.
இது தொடர்பாக அமலாக்கத்துறை நிதி மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, சாரதா சிட்பண்ட் நிறுவனம் மூலம் பயனடைந்தவர்களின் சொத்துக்களை தொடர்ந்து முடக்கி வருகிறது.
இந்த நிலையில் சாரதா குழுமத்திற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி, நளினி சிதம்பரம் வழக்கறிஞராக செயல்பட்டு அதற்கு கட்டணமாக ரூ.1.26 கோடி பெற்றுள்ளார். இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,வுமான தேவேந்திரநாத் பிஸ்வாஸ், அசாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தத்தா ஆகியோரும் பயனடைந்துள்ளனர். என்றும் இவர்களின் இருந்து ரூ.6 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்களை நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த மோசடியில் ஆளும் மம்தா கட்சியின் இரண்டு எம்.பி.க்கள் மற்றும் 11 எம்.எல்.ஏ.,க்கள் சமந்தபடுத்த பட்டுள்ளனர் என்பதும், எனவே அமலாக்க துறை வழக்கு விசாரிக்க தொடர்ந்து தடைகள் ஏற்படுத்தி வேந்தர் மம்தா, என்பதும் குறிப்பிடத்தக்கது. வக்கீலாக வந்த நளினி சிதம்பரமம் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.