மத்திய அரசு விமான நிலையம் மட்டும் அமைக்கும்: மாநில அரசு தான் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பணிகளை செய்யும் என்றார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது: மகளிர் மற்றும் பாதுகாப்புக்கு 2023-24ம் நிதியாண்டுக்கான தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாவது ஆண்டாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், சென்னையை அடுத்த பரந்தூரில், புதிய பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும், அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விமான நிலையம் அமைக்க எழுந்திருக்கும் எதிர்ப்புகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மாநில அரசு தான் தீர்வு காண வேண்டும். மேலும், எங்கள் பணி விமான நிலையம் அமைப்பது மட்டுமே, நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அனைத்தும் மாநில அரசு தான் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.