திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. அக்கோயிலுக்குள் 3 பேர் பர்தா அணிந்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்தா அணிந்து சென்றது பெண்களா அல்லது ஆண்கள் உளவு பார்ப்பதற்காக பெண்களைப் போல பர்தா அணிந்து வந்தார்களா என்கிற சந்தேகத்தையும் அது ஏற்படுத்தி இருக்கிறது.
திருநெல்வேலியில் பிரபலமான நெல்லையப்பர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு
06.02.2023 காலை 8:15 மணியளவில் பர்தா உடையணிந்து நுழைத்திருக்கிறார்கள். நெல்லையப்பர் கோயில் முழுவதையும் சுற்றி வந்த இவர்கள், நெல்லையப்பர் மற்றும் அம்மன் சன்னதிக்கும் சென்று வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள், குறிப்பிட்ட சில இடங்களை அவர்கள் செல்போன் மூலம் போட்டோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது கோயிலுக்குள் பக்தர்கள் செல்லும்போது உடை அணிவதில் சில விதிமுறைகள் உள்ளன.
அப்படி இருக்கும் போது, பர்தா அணிந்து சென்ற 3 பெண்களை உளவுப் பிரிவு போலீஸாரோ, கோயில் ஊழியர்களோ கண்டு கொள்ளவில்லை. அதோடு பர்தா அணிந்து சென்றது உண்மையிலேயே பெண்கள்தானா அல்லது ஆண்கள் தான் பர்தா அணிந்து பெண்களைப் போல கோயிலுக்குள் நுழைந்து உளவு பார்த்தார்களா என்கிற கேள்வியும்
எழுந்திருக்கிறது. அதோடு, இவர்கள் கையில் என்ன கொண்டு வந்தார்கள், கோயிலுக்குள் எதையேனும் வைத்து விட்டுச் சென்றார்களா ?
என்கிற சந்தேகமும் எழுத்திருக்கிறது. இந்த நிலையில், இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன், கோயில் அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார். இதையடுத்து கோயிலில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், இச்சம்பவம்
குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே கோயிலுக்குள் யாரோ பர்தா அணிந்து வந்த சம்பவத்தையும், கவன குறைவாக இருந்த அறநிலையத் துறையை கண்டித்தும் கோயில் முன்பு இன்று (07.02.2023) இந்து முன்னணி அமைப்பினர் கண்களில் கறுப்பு துணி கட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.