விடியல் அரசு அமைத்து கொடுத்த தார் சாலையை பாய் போல் சுருட்டி எடுத்த கிராம மக்கள். இணையத்தில் வைரல் ஆகிறது வீடியோ!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள உள்ளது வீடுர் அணைபகுதியின் கரைப்பகுதியை பலபடுத்த தமிழக அரசின் 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்த நிலையில், 5 நாட்களுக்கு மேலாக தார் ரோடு அமைக்கும் பணி வேகமாக நடந்து வந்த நிலையில், அணை பகுதியில் சேர்ந்த மக்கள் தார் சாலை தரமற்ற முறையில் அமைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தார் ரோட்டின் தரத்தை ஆய்வு செய்த பொது பாயை போல சுருட்டியதை வீடியோ எடுத்து சமூக வலை தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதனால் ஊரகவளர்ச்சித் துறை அதிகாரிகள், பொது பணி துறை அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என முதல்வர் கூறி வரும் நிலையில் பெரும் இது தான் திராவிட மாடல் ரோடு என கருத்து தெரிவித்து வருகின்றனர்.