உலகின் சிறந்த மாணவி: நடாஷா பெரியநாயகம் இரண்டாவது முறையாக தேர்வு

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனமான Johns Hopkins Center for Talented Youth (சிடிஓய்). இந்த நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்  சிடிஒய் எனும் தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்தவில், மாணவர்கள் பயிலும் பாடத்திட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பிற் குரிய பாடதிட்டங்களில் இருந்து கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் சுமார் 76 நாடுகளைச் சேர்ந்த 15,300 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 27% சதவீதத்துக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே உலகின் திறமையான மாணவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களை சிடிஒய் அமைப்பு வெகுவாக பாராட்டியுள்ளது.

அந்த வகையில், அமெரிக்கா வாழ் இந்திய மாணவியான நடாஷா பெரியநாயகம் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவர், கடந்த 2021 -ல் நடைபெற்ற தேர்விலும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாணவர்களை காட்டிலும் இவர் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார். நடாஷாவின் பெற்றோர்கள் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top