காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் : இந்தியாவில் முதல் முறை

இந்தியாவில் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கனிம பொருளான லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமானா பகுதியில், லித்தியம் படிமம் 59 லட்சம் டன் அளவுக்கு இருப்பதாக மத்திய சுரங்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு மையம் 2018-–19 ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் புவியியல் ஆய்வை தொடங்கியது. 4 ஆண்டுகளாக நடைபெறும் ஆய்வில் ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட் ஆகிய 10 மாநிலங்களிலும் தங்கம், லித்தியம், மாலிப்டினம் உட்பட 51 வகை கனிம தொகுதிகளை கண்டறிந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே இடத்தில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவே முதல்முறை. லித்தியம் மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட மின்சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. லித்தியம் அயன் பேட்டரிதான். மின்வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் லித்தியம் மிக முக்கியமான மூலப் பொருளாக உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் போல, லித்தியம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்கள் கரியமில வாயு வெளியேற்றத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த புதைபடிவ எரிசக்திக்கு மாற்றாக, பசுமை எரிசக்தியை உருவாக்கும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மின்வாகனங்களை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து வருகின்றன. அடுத்து வரும் 2035-ம் ஆண்டில் உலகஅளவில் புழக்கத்தில் இருக்கும் வாகனங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டவை மின்வாகனங்களாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் 2030-ம் ஆண்டில் பதிவு செய்யப்படும் வாகனங்களில் 30 சதவீதம் மின் வாகனங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
உலகளவில் மின் வாகனங்களுக்காண பேட்டரி தயாரிப்பில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுவருகிறது. பேட்டரி தயாரிப்புக்கு லித்தியம், நிக்கல், கோபால்ட் உள்ளிட்ட கனிமங்கள்அவசியம். இவை போதுமான அளவில் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் தேவை அதிக அளவில் உலக நாடுகள் மத்தியில் தேவைபடுகிறது.
உலக நாடுகள் லித்தியம் கண்டுபிடிக்க தீவிரமாக உள்ள நிலையில், இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நாட்டில் சில ஆண்டுகளாக மின்வாகன விற்பனை வேகமெடுத்து வருகிறது. இந்தியாவில் லித்தியம் இருப்பு இதற்கு முன் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து லித்தியம் அயன் பேட்டரி இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. இதனால், மின்வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் படிமம் கண்டிபிடிக்கப்பட்டிருப்பது, உள்நாட்டிலேயே லித்தியம் அயன்பேட்டரி தயாரிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆர்டிகிள் 370 ஐ நீக்கிய போது கதறிய எதிர் கட்சியினருக்கு இது மிகப்பெரிய சவுக்கடியாகி மாறி உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top