மதுரை எய்ம்ஸ் கல்லூரி சம்பந்தமாக தவற்றை தமிழக அரசு மீது வைத்துக்கொண்டு மத்திய அரசை குற்றம் சாட்டி கேள்வி எழுப்பிய திமுக எம்பி டி ஆர் பாலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காட்டமாக பதில் கொடுத்தார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில் ‘மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் அரசியலாக்கி வருகின்றனர். மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு உள்கட்டமைப்பு வசதி மட்டுமே ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை அமைக்க உரிய நேரத்தில் மாநில அரசு நிலத்தை ஒதுக்கவில்லை. இந்த திட்டம் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. அந்த நிறுவன பிரதிநிதிகள் கடந்த 2 ஆண்டுகளாக மதுரைக்கு வரமுடியவில்லை. திட்டச் செலவு அதிகரித்திருக்கிறது. இதுவரை ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கிறது.
அனைத்து தகவல்களையும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு அளித்துள்ளோம். ஆனால் அதையும் மீறி அவர்கள் அரசியல் செய்கின்றனர். அவர்கள் அரசியல் செய்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. சுகாதாரத் துறையை அரசியலாக்க வேண்டாம் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் கல்லூரிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ரூ.1,900 கோடியில் நல்ல மருத்துவக் கல்லூரி கட்டப்படும். போதிய வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத மருத்துவ கல்லூரிகள் செயல்பட நான் அனுமதி வழங்க மாட்டேன். தமிழகத்தில் சில மருத்துவ கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. அந்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது. உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மருத்துவ கல்லூரிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேசினார். மத்திய அமைச்சரின் காட்டமான பதிலை எதிர் கொள்ள முடியாத திமுக கூச்சல் எழுப்பிய வண்ணம்
வெளிநடப்பு செய்தனர். பாவம் திமுக எம்பிக்கள் ஏதோ பாராளுமன்றத்தை தெருமுனை கூட்டம் என்று எண்ணி விட்டனர். தங்களை தோலுரிக்கும் பதில் வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.