ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் டோக்கன் விநியோகம் செய்யச் சென்ற ஒன்றிய செயலாளர் சர்புதீன் காரில் இருந்த டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.
இடைத்தேர்தல் ஈரோட்டில் 27.02.2023 நடக்க உள்ளது. இந்த நிலையில் திமுக வினர் அதிமுகவினரின் பிரசாரங்களுக்கு பொது மக்களை செல்ல அனுமதிக்காமல் தொந்தரவு செய்வதும், திமுகவின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கு டோக்கன்கள் வழங்கி கூட்டம் முடிந்த பின் டோக்கன்களை கொடுத்துவிட்டு பணம் வாங்கி செல்ல வழங்கப்பட்டு வருவதாகவும் திமுக மீது
புகார்கள் குவிந்து வந்தது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணன் உன்னி அறிவுறுத்தலின் படி பறக்கும் படையினர் நேற்று (10.02.2023) இரவு சோதனை செய்தனர்.
சோதனையின் போது ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட தெருவில் திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மு.சர்புதின், என்பவரது கார் இருப்பதை கண்ட பறக்கும் படையினர் அதனை சோதனை செய்தனர்.
சோதனையின் போது காரில் இருந்து பறக்கும் படையினர் கட்டு காட்டாக வாக்காளர்களுக்கு வழங்கவைத்திருந்த டோக்கன்களை பறிமுதல் செய்தனர். அப்போது நேற்று மாலை (10.02.2023) நடந்த பொதுக்கூட்டத்திற்கு பொது மக்களை அழைத்து செல்பவர்களுக்கு வழங்க வைத்திருந்த டோக்கன்களை பறக்கும்படையினரின் சோதனையில் சிக்கியது.
இந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன். பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர் தென்னரசு ஆகியோர் நேரடியாக களம் காண்கின்றனர். இந்த சூழலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வசிக்கும் பகுதியில் டோக்கன் வினியோகிக்கப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய
ஆடியோவை பதிவிட்டிருந்தார். அதில் எங்கெல்லாம் இருந்து யாரை எல்லாம் வரவழைக்க வேண்டும்.
எப்படி பணம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருந்தார். இந்த வீடியோ உண்மை என்றால்
முதல்வர் ஸ்டாலின் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த
நிலையில் ஈரோடு கிழக்கு டோக்கன்(பண) மழையில் நனைவதை உறுதி செய்துள்ளது. பெரியார்
மண்ணாவது, மண்ணாங்கட்டியாவது எல்லாம் பணம் தான் என்கின்றார் பொது ஜனம்.