மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் சி.பி ராதா கிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிப்பூர் மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த இல.கணேசன், நாகலாந்து மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்
ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ் மகாராஷ்டிரா மாநிலத்துக்கும், சத்தீஸ்கர் கவர்னராக இருந்த சுஷ்ஶ்ரீ அனுசுயா மணிப்பூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர ஆளுநராக இருந்த ஸ்ரீ விஷ்வா பூஷன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் கவர்னர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர கவர்னராக ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நாசிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார் சி பி ராதாகிருஷ்ணனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் தனி முத்திரையை பதித்துள்ளவர் எனவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.