‘ஆவண படம்’ என்ற பாணியில் பொய்களை பிரச்சாரம் செய்யும் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு சொந்தநாடான இங்கிலாந்திலும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
‘இந்தியா மோடி கேள்வி’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய ஆவணப்படம் வெளியிட்டு நாட்டில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான பிபிசி, இப்போது மற்றொரு ஆவணப்படம் தொடர்பாக
தனது சொந்த நாட்டிலே ‘பாய்காட் பி.பி. சி’ என்ற புறக்கணிப்பு அழைப்புகளை எதிர்கொண்டுள்ளது.
பி.பி.சி தனது சமீபத்திய ஆவணப்படமான தி ஷமிமா பேகம் ஸ்டோரி, ஷமினா பேகம் பற்றிய பி.பி.சியின் பத்து பாகங்கள் கொண்ட போட்காஸ்ட்டின் தொடர்ச்சியான ஒரு ஆவணப்படமாக உள்ளது.
உலகின் மிக மோசமான பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியான ஷமிமா பேகத்திற்கு அனுதாபத்தை ஏற்படுத்தி கொடுக்க பி.பி.சி இதில் முயற்சித்தது.
‘அவரது பயணத்தைத் திரும்பப் பெறுதல்’ என்ற பெயரில், அவரை ஒரு பாதிக்கப்படக்கூடிய இளம் பெண்ணாக சித்தரிக்க முயன்றது, இது இங்கிலாந்து அரசால் அவருக்கு விதிக்கப்பட்ட இங்கிலாந்துக்குத்
திரும்புவதற்கான தடையை முறியடிக்க அவருக்கு ஆதரவாக அனுதாபங்களைப் பெறும் முயற்சியாகவே கருதப்படுகிறது.
பி.பி.சியின் இந்த முயற்சியை அடுத்து, பி.பி.சிக்கு எதிரான இங்கிலாந்து மக்களின் சீற்றம் இப்போது அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து குடிமக்கள் பி.பி.சிக்கான தங்களது சந்தாக்களை புதுப்பிக்க வேண்டாம் என அரசியல்வாதிகள் உட்பட பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பலர், தங்களது பி.பி.சி சந்தாவை ரத்து செய்து வருகின்றனர். எம்.பி ஸ்காட் பென்டன், மூத்த ஊடக நிர்வாகியும் முன்னாள் சன் எடிட்டருமான கெல்வின் கால்டர் மெக்கென்சி, பழமைவாத அரசியல்வாதியான ஆண்ட்ரூ ஆர்டி டேவிஸ், சீர்திருத்தக் கட்சி அரசியல்வாதிகள், புகைப்பட பத்திரிக்கையாளர் மைக்கேல் மார்ட்டின் என பலர்
பி.பி.சிக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஷமினா ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தபோது மைனர் என்பது உண்மைதான் என்றாலும், வயது வந்த பிறகும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவர், ஐ.எஸ்.ஐ.எஸ் யின் ‘ஹிஸ்பா’ என்ற கொடூரமான அறநெறிப் காவல் படையில் உறுப்பினராக இருந்தார். அப்போது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை ஷமினா பேகம் சித்திரவதை
செய்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதலை ஷாமினா ஆதரித்தார் என குற்றம் சாட்டப்படுகிறது. ஷமினா பேகம் இப்போது வடக்கு சிரியாவில் உள்ள அல் ரோஜ் தடுப்பு முகாமில் வசிக்கிறார். இது சிரியா ஜனநாயகப் படைகளால் நடத்தப்படுகிறது. முகாமில் வாழ்வது சிறையில் இருப்பதை விட மோசமானது, முகாமில் இருந்து வெளியேற முடியுமா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்று அவர் பி.பி.சி யிடம் கூறியுள்ளார். இது போன்று அனைத்து நாடுகளிலும் தொடர்ந்து பி.பி.சி க்கு நெற்றி அடியை ஒவொரு நாட்டு மக்களும் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சொந்த
நாட்டை தவறாக சித்தரித்து குற்றவாளிகளுக்கு மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்த தொடர்ந்து பி.பி.சி முயற்சித்து வருவதை பல்வேறு உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன.