தமிழகத்தில் இருந்து இதுவரை 5 பேர் கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தமிழர்களுக்கு மோடி அரசு அளித்துள்ள முக்கியத்துவதை வெளிப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக பாஜக வின் மூத்த தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் நேற்று புதிய கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் புதிய கவர்னர்களையும், 7 மாநில கவர்னர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் புதிதாக
நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேரில், நான்கு பேர் பா.ஜ க வின் மூத்த தலைவர்களாவர். இதில் இருவர், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழகத்தையும், மற்றொருவர் ராஜஸ்தானையும் சேர்ந்தவர்களாவார்கள். சத்தீஸ்கர் கவர்னராக இருந்த அனுசுயா உய்கே, மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் கவர்னராக இருந்த இல.கணேசன், நாகாலாந்துக்கு கவர்னர் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பீஹார் கவர்னராக இருந்த பகு சவுகான் மேகாலயாவுக்கும், ஹிமாச்சல் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பீஹாருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷியாரி மற்றும் லடாக் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர் திரு.ராதா கிருஷ்ணன் மாத்தூர்-ரின் ஆகியோரின் ராஜினாமாவை ஏற்பதாகவும் குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் கவர்னர் ரமேஷ் பயஸ், மஹாராஷ்டிராவின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதில் அருணாச்சல பிரதேச கவர்னராக இருந்த பிரிகேடியர் பி.டி.மிஸ்ரா, லடாக் துணை நிலை
கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேச கவர்னராக இருந்த பிரிகேடியர் பி.டி.மிஸ்ரா,
லடாக் துணை நிலை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி
அப்துல் நசீர், ஆந்திராவின் கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். இம்மாநில கவர்னராக இருந்த பிஸ்வ
பூஷண் ஹரி சந்தன் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். ராணுவத்தின் வடக்கு பிராந்தியத்தின்
தலைவராக பணியாற்றிய லெப்டினென்ட் ஜெனரல் கைவல்ய திரு.விக்ரம்பரநாயக், அருணாச்சல
பிரதேசத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, சிக்கிம் மாநிலத்துக்கும், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும், சிவ பிரசாத் சுக்லா, ஹிமாச்சல பிரதேசத்துக்கும், குலாப் சந்த் கட்டாரியா, அசாம் மாநிலத்துக்கும் கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆச்சார்யா, உத்தர பிரதேச மேலவை உறுப்பினராக இருந்தவர். சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கவர்னர்களாக உள்ளனர். இந்த மூவரும், பா.ஜ.க, மூத்த தலைவர்களாக இருந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு. தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா கவர்னராக உள்ளார். புதுச்சேரியை கூடுதலாக கவனிக்கிறார். மணிப்பூர் கவர்னராக இருந்த இல.கணேசன், நாகாலாந்துக்கு கவர்னராகிறார். சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். என நேற்று(12.02.2023) ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்த பின் 5 பேர் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கவர்னர்களாக தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர். இவர்களில் திரு. சதாசிவன் கேரளாவின் கவர்னர் ஆக 2014ல் நியமித்தது மத்திய பாஜக அரசு. இவர் இந்தியாவின் 40 வது தலைமை நீதிபதியாக பணியாற்றிவர் என்பதும், உச்ச நீதிமன்ற
நீதிபதியை கவர்னர் ஆக நியமனம் செய்தது இதுவே முதல் முறை ஆகும். இவரை தொடர்ந்து திரு.சண்முகநாதன் (12.05.2015) மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டார், இவரை தொடர்ந்து மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த சையது அகமது மரணம் அடைந்ததால் (01.10.2015) முதல் கூடுதல் பொறுப்பாக
மணிப்பூர் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். இவர்களை அடுத்து பாஜகவின் மாநில தலைவி ஆக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், என இவர்களது வரிசையில் புதிதாக பாஜக வை சேர்ந்த சி.பி. ராதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கு மத்திய பாஜக
அரசு அளித்துள்ள முக்கியதுவத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் இருந்து புதிதாக கவர்னராக நியமிக்கப்பட்ட திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.