சேலம் மாவட்டத்தில், 200க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் செயல் பட்டு வருகின்றன. அங்கு மாதந்தோறும் மது விற்பனையை அதிகரிக்க, கடை நிலை ஊழியர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இதே சமயம், கடந்த ஜனவரி மாதத்தில் 48 கடைகளில் மது விற்பனை அதிகரிக்கவில்லை என்றும் அதனால், அந்த கடையின் மேற்பார்வையாளர்களுக்கு விளக்கம் கேட்டு, டாஸ்மாக் உயர்அதிகாரிகள், ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளனர்.
இதுபற்றி, டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், அ.தி.மு.க., ஆட்சியில் மது விற்பனையை மாதந்தோறும் அதிகரிக்க, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டனர். தற்போதைய, தி.மு.க., ஆட்சியில் எழுத்துப்பூர்வ
விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்புகின்றனர். மக்களை பிடித்து இழுத்து வந்து வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கவா முடியும்?’ என்றனர். இந்த சூழலில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் சமீபத்தில் நடத்திய
கூட்டம் ஒன்றில் “தற்போது 4 இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் மது குடிப்பதும், மேலும் அவ்வழியே செல்லும் பெண்களை வழி மறித்து காதல் தொல்லை கொடுப்பதும், அவர்களை கொலை செய்வதுமான
சம்பவங்கள் நடக்கின்றன. சமூகம் எவ்வளவு சீரழிய வேண்டுமோ, அவ்வளவு சீரழிந்து விட்டது. இதே நிலைமை தொடர்ந்தால், நாம் வீதிகளில் நடமாட முடியாத சூழல் உருவாகும். 9வது பயிலும் மாணவன் கூட மது போதையில் பள்ளிகளுக்கு வருவதும், கஞ்சா போதையில் வருவதும் நடக்கிறது. ஆசிரியர்கள் பயத்துடனே பள்ளிக்கு வருகின்றனர். இதுபோன்ற சூழலில் இளைய சமுதாயத்தினரை நல்வழிப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது” என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியிருந்தார். இந்த சூழலில் அவர் கலெக்டர் ஆக பணியாற்றும் மாநிலத்தில் இது போன்று சம்பவம் நடந்திருக்கிறது அதிர்ச்சியை எற்படுத்தி இருக்கிறது. கரூரில் அதிகம் சாராயம் விற்ற டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கிய பாராட்டு சான்றிதழில், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டமையை பாராட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நற்சான்று வழங்கப்படுகிறது என்பது சர்சைக்குள்ளானது. இந்த நிலையில், வழங்கப்பட்ட சான்றிதழ் திரும்ப பெறப்பட்டு வாசகங்களை மாற்றி அமைத்து மீண்டும் கொடுத்தனர். இந்த நிலையில், பிற மாநிலங்களில் அரசு சாராய கடையை நடத்தவில்லை. தமிழகத்தில் மட்டும் தான் கருணாநிதி பேனா போட்ட கையெழுத்தில் அரசு சாராயம் விற்று கஜானாவை நிரப்பிவருகிறது. தமிழகம்தான் அதிகம் விதவைகளை கொண்ட மாநிலமாக இருக்கிறது என திமுக எம்.பி கனிமொழி கூறியது இங்கு நினைவு கூறத்தக்கது.