நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 3, 4 ஆண்டுகளில் முழுமையாக நீக்கம் – அமித்ஷா

நாகாலாந்தின் அடுத்த 3, 4 ஆண்டுகளில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் மாநிலத்தில் இருந்து
முழுமையாக நீக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளாா்.
நாகாலாந்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் (27.02.2023) நடைபெற உள்ளது. இதில்
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
என்டிபிபி 40 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

நேற்று (21.02.2023) கிழக்கு நாகாலாந்தில் உள்ள துயென்சாங் மாவட்டத்தில் நடைபெற்ற தோ்தல்
பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டு பேசியதாவது:
‘கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன், நாகாலாந்தில் தீவிரவாதம் இருந்தது. பின்னா் அமைதிக்கான நடவடிக்கைகளை
மத்திய அரசு தொடங்கியது. இங்குள்ள நாகா இன பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்து,
மாநிலத்தில் நிரந்தரமாக அமைதி ஏற்பட பிரதமா் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்கு பலன் கிடைக்கும்.
கிழக்கு நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களை உள்ளடக்கி தனி மாநிலம் கோரும் கிழக்கு நாகாலாந்து மக்கள்
அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகம் இடையே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் எட்டப்பட்டது.
ஆனால் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியவில்லை.
தோ்தல் முடிந்த பின், அந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படும். அதன் மூலம் கிழக்கு நாகாலாந்தின் அனைத்து
பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும்.
நாகாலாந்தின் பல பகுதிகளில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. அடுத்த 3, 4
ஆண்டுகளில் அந்தச் சட்டம் மாநிலத்தில் இருந்து முழுமையாக நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top