நாடாளுமன்ற வளாகத்தில் சிவசேனை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தை மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத்
ஷிண்டே தலைமையிலான பிரிவுக்கு மக்களவைச் செயலகம் ஒதுக்கியுள்ளது.
ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியை தோ்தல் ஆணையம் அங்கீகரித்ததைத் தொடா்ந்து மக்களவைச்
செயலகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பெரும்பான்மை கோட்பாடுகளின் அடிப்படையில் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முதல்வா் ஏக்நாத்
ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியை தோ்தல் ஆணையம் கடந்த வாரம் அங்கீகரித்தது. கட்சியின்
பெயா் மற்றும் ‘வில்-அம்பு’ சின்னம், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு ஒதுக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, ‘நாடாளுமன்ற வளாகத்தில் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையை எங்கள்
தரப்புக்கு ஒதுக்கி உத்தரவிட வேண்டும்’ என்று கோரி ஏக்நாத் ஷிண்டே பிரிவு மக்களவை குழுத் தலைவா் ராகுல்
ஷெவாலே சாா்பில் மக்களவைச் செயலகத்துக்கு கடந்த 18-ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள மக்களவைச் செயலகம், ‘நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ள சிவசேனை
அலுவலகம் ஷிண்டே பிரிவு சிவசேனைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.