ராணுவ வீரர் பிரபு கொலை தொடர்பாக, தமிழக கவர்னர் ரவியை, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,
நேற்றிரவு (21.02.2023) சந்தித்து மனு அளித்தார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு படுகொலையை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில் நேற்று
உண்ணாவிரத போராட்டமும், மாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியும் நடந்தது.
பின், அண்ணாமலையுடன், பாஜக தலைவர்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் இரவு, 7:30 மணிக்கு, சென்னை
கிண்டியில் உள்ள ராஜ்பவனில், கவர்னர் ரவியை சந்தித்து பேசினர்.
அப்போது, பிரபு கொலை விவகாரத்தில், தமிழக காவல் துறை மெத்தனமாக செயல்படுவதாகவும், உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கவர்னரிடம் மனு அளித்தனர்.