சென்னையில் நேற்று (21.02.2023) பேரணி சென்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 3,500
பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ‘வழக்குப்பதிவால் பயந்துவிட மாட்டோம் என்றும், இது என் மீதான
84வது வழக்கு எனவும்’ அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக பாஜக சார்பில் ராணுவ வீரர் கொலையை கண்டித்து உண்ணாவிரதம் மற்றும்
மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பங்கேற்ற பாஜகவினர்
3,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து அண்ணாமலை கூறுகையில், ‘வழக்குப்பதிவால் யாரும் பயந்துவிட மாட்டோம். இது என் மீதான
84வது வழக்கு. இந்த விவகாரத்தில் நாங்கள் விரும்புவது என்னவென்றால், தங்கள் கட்சிக்காரர் கொலை செய்த
ராணுவ வீரரின் குடும்பத்தினரிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் வரும் நாட்களில்
போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’ என்றார்.